Union Budget 2023:பட்ஜெட்டில் உரம், உணவு மானியத்தை ரூ.3.70 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டம்

By Pothy Raj  |  First Published Jan 4, 2023, 11:32 AM IST

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், உரம் மற்றும் உணவுக்கான மானியத் தொகையை ரூ.3.70 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், உரம் மற்றும் உணவுக்கான மானியத் தொகையை ரூ.3.70 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவலின்போது வழங்கப்பட்ட சலுகைகளால் அதிகரித்த நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க இருப்பதாக மத்திய அரசின் இரு முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

உக்ரைனிடம் ரஷ்யாவின் அணுகுமுறையும் இந்தியாவிடம் சீனாவின் மிரட்டலும் ஒன்றுதான்: ராகுல் காந்தி விளக்கம்

மத்திய அரசின் மொத்த ரூ.39.45லட்சம் கோடி பட்ஜெட்டில் உணவு மற்றும் உரத்துக்கு வழங்கப்படும் மானியம் என்பது 8-ல் ஒருபகுதியாகும். உணவு மானியம் குறைக்கப்படும் போது, அது அடுத்துவரும் தேர்தலில் பிரதிபலிக்க்கூடும், அரசியல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் உணவுக்கான மானியம் ரூ.2.70 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது, இது வரும் 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2.30 லட்சம் கோடியாகக் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

'என் சகோதரர் ராகுல் காந்தி போர் வீரர்! பாஜக அரசுக்கு அஞ்சமாட்டார்': பிரியங்கா காந்தி பெருமிதம்

உரத்துக்கான மானியம் நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.2.30 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இது வரும் 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1.40 லட்சம் கோடியாகக் குறைக்கப்படலாம் என்று மத்திய அரசு அதிகாரிகள் இருவர் தெரிவித்தனர். இந்த தகவலைத் தெரிவித்த இரு உயர்அதிகாரிகளும் தங்கள் பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மானியம் குறைப்பு குறித்து நிதிஅமைச்சகத்திடம் எந்த பதிலும் இல்லை. அதேபோல உணவு மற்றும் உரத்துறை அமைச்சகமும் பதில்அளிக்க மறுத்துவிட்டன.

கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட இலவச உணவுத் திட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு ஒதுக்கப்பட்ட தொகை வேறு திட்டங்களுக்கு மாற்றப்படும். 2023ம் ஆண்டிலும், 2024ம் ஆண்டிலும் தொடர்ந்து சட்டசபைத் தேர்தல் வர இருக்கும் நிலையில், ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டமும் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை( fiscal deficit) 6.4 சதவீதத்துக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இது வழக்கமான சராசரியான 4 முதல் 4.5 சதவீதத்தைவிட அதிகமாகும். கொரோனா காலத்தில் நாட்டின் நிதிப்பற்றாக்குறை 9.5 சதவீதம்வரை உயர்ந்தது

நிதிப்பற்றாக்குறையில் குறைந்தபட்சம் 2 புள்ளிகள் அளவு குறைக்க வரும் 2023-24ம் ஆண்டுபட்ஜெட்டில் மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. பட்ஜெட்டில் மானியங்களை எவ்வளவு குறைப்பது என்பது குறித்து இந்த மாதம் பிற்பகுதியில் இறுதிக்கட்ட ஆலோசனையை நிதிஅமைச்சகம் நடத்தும், அப்போது இந்தத் தொகை இறுதி செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்


 

click me!