Google CCI: கூகுள் நிறுவனத்துக்கு ரூ.133.70 கோடி அபராதம்: மேல்முறையீட்டில் என்சிஎல்ஏடி உத்தரவு

By Pothy RajFirst Published Jan 4, 2023, 3:24 PM IST
Highlights

கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ(CCI) விதித்த ரூ.1,337.76 கோடியில் 10 சதவீதத்தை மட்டும் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ(CCI) விதித்த ரூ.1,337.76 கோடியில் 10 சதவீதத்தை மட்டும் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்கங்களை ஒழுங்குபடுத்தும் இந்திய வணிகப் போட்டி அமைப்பு விதித்த அபாரத்துக்கு எதிராக கூகுள் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் 2 நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பட்ஜெட்டில் உரம், உணவு மானியத்தை ரூ.3.70 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டம்

ஆனால், இந்திய வணிகப் போட்டி விதித்த உத்தரவுக்கு உடனடியாக எந்தத் தடையையும் விதிக்க தேசிய கம்பெனிச் சட்ட மேம்முறையீட்டு தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. அதேநேரம் இந்திய வணிகப் போட்டியின் முறையீடுகளையும் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 13ம் தேதிக்குள் இந்திய வணிகப் போட்டி தனது பதிலை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஆப்ஸ்களான கூகுள் சர்ச், குரோம், யூடியூப் ஆகியவற்றை கூகுள் நிறுவனம் செல்போனில் முன்கூட்டியே நிறுவிவிற்பனைக்கு அனுப்புவதால் பிற போட்டியாளர்கள் பாதிக்கப்படுவதாக சிசிஐ அமைப்பு குற்றம்சாட்டியது.

இதனால் பிற நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்பட்டு கூகுள் நிறுவனம் மட்டுமே பெரும்பான்மையான ஆதாயம் அடைகிறது, இது ஆரோக்கியமான போட்டியை வணிகத்தில் ஏற்படுத்துவதில்லை என்று சிசிஐ குற்றம்சாட்டியது.

உலகில் மூன்றில் ஒருபகுதி நாடுகள் 2023-ல் பொருளாதார மந்தநிலையைச் சந்திக்கும்: ஐஎம்எப் எச்சரிக்கை

இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1337 கோடி அபாரதம் விதித்து சிசிஐ உத்தரவிட்டது. இந்த அபாரதத்தொகையை செலுத்தி, நிதி பரிவரித்தனைகளை தாக்கல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் கூடுதலாக அபராதத்தை செலுத்த வேண்டியதிருக்கும் என எச்சரித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து, கூகுள் நிறுவனம் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதில் கூகுள் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார்.

சிசிஐ உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும், கூகுள் நிறுவனம் விதிமுறைகளை மீறியதற்கு ஆவணங்கள் இல்லை  என்று சிங்வி கோரிக்கை விடுத்தார்.

ஆனால் உடனடியாக தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் ராகேஷ் குமார், அலோக் ஸ்ரீவஸ்தவா, ஆகியோர் முறையாக விசாரிக்காமல் தடை விதிக்க முடியாது எனக் கோரி மறுத்துவிட்டனர். 


 

click me!