sbi: எஸ்பிஐ (SBI) வாடிக்கையாளர்களே! உங்களுக்காக வாட்ஸ்அப் பேங்கிங் சேவை தொடக்கம்: வசதிகள் என்ன?

By Pothy Raj  |  First Published Jul 22, 2022, 1:27 PM IST

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா வங்கி, தங்களின் வாடிக்கையாளர் வசதிக்காக, வாட்ஸ்அப் பேங்க் சேவையை அறிமுகம் செய்துள்ளது.


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா வங்கி, தங்களின் வாடிக்கையாளர் வசதிக்காக, வாட்ஸ்அப் பேங்க் சேவையை அறிமுகம் செய்துள்ளது. 

இதன் மூலம் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சேவைகளை மட்டும் வாட்ஸ்அப் மூலம் பெறலாம். ட்விட்டரில் எஸ்பிஐ வங்கி வெளியிட்ட செய்தியில் “ வாட்ஸ்அப்பிலும் வங்கிச் சேவை வந்துவிட்டது. உங்கள் சேமிப்புக் கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் பெறலாம்” எனத் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

மோசமான உலகச்சூழிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது: சக்திகாந்த தாஸ் பெருமிதம்

என்ன செய்ய வேண்டும்

1.    வாட்ஸ்அப் வங்கி சேவையை எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். 

2.    வங்கியில் அளித்துள்ள செல்போன் எண்ணிலிருந்து 7208933148 என்ற எண்ணுக்கு, WAREG எனப் டைப் செய்து, உங்கள் சேமிப்புக்கணக்கு எண் ஆகியவற்றை இடைவெளியுடன் பதிவிட்டு அனுப்ப வேண்டும்.

3.    பதிவு செய்தபின், எஸ்பிஐ எண், 90226-90226 என்ற எண்ணிலிருந்து உங்கள் மொபைல் போனுக்கு செய்தி வரும்

4.    எஸ்பிஐ வாட்ஸ்அப்பில் Hi என டைப் செய்து அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு பதிலாக, எஸ்பிஐ வாட்ஸ்அப் சேவையில் வெற்றிகரமாக இணைந்துவிட்டீர்கள் என்ற செய்தி வரும். அதன்பின் வாட்ஸ்அப் சேவைகளைப் பெறலாம்

பறக்கப்போகுது ஆகாசா ஏர்(akasa air) ! ஆகஸ்ட் 7 முதல் சேவைத் தொடக்கம்: கட்டணம் எவ்வளவு?

 

Your bank is now on WhatsApp. Get to know your Account Balance and view Mini Statement on the go. pic.twitter.com/5lVlK68GoP

— State Bank of India (@TheOfficialSBI)

என்னென்ன சேவைகள்

எஸ்பிஐ வங்கி வாட்ஸ்அப் மூலம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இரு சேவைகளை வழங்குகிறது.முதலாவதாக சேமிப்புக்கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம், 2வதாக, மினி ஸ்டேட்மென்ட் எடுக்க முடியும். இந்த மினி ஸ்டேட்மென்டில் கடைசியாக 5 பிரமாற்றங்களையும் பார்க்க முடியும். 

இது தவிர வாடிக்கையாளர்களுக்கு வேறுஏதேனும்கேள்விகல் இருந்தாலும் அதையும் டைப் செய்து அனுப்பலாம். 

டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தில் 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு

இதேபோல எஸ்பிஐ கிரெடிட்கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக, வாட்ஸ்அப் சேவையை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், கணக்குகள் குறித்த விவரம், ரிவார்ட் புள்ளிகள், பேலன்ஸ், கார்டுக்கான செலுத்துதல் கட்டணம் ஆகியவற்றை அறிய முடியும்

click me!