rbi governer: மோசமான உலகச்சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே உள்ளது: சக்திகாந்த தாஸ் பெருமிதம்

By Pothy RajFirst Published Jul 22, 2022, 12:52 PM IST
Highlights

மோசமான உலகச் சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது. வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்திய ரூபாய் மதிப்பு சரிவு பெரிதாக இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

மோசமான உலகச் சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது. வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்திய ரூபாய் மதிப்பு சரிவு பெரிதாக இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

அமெரி்க்காவில் வரலாறு காணாதவகையில் பணவீக்கம் உயர்ந்துள்ளதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் இந்தியாவில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள். 

பறக்கப்போகுது ஆகாசா ஏர்(akasa air) ! ஆகஸ்ட் 7 முதல் சேவைத் தொடக்கம்: கட்டணம் எவ்வளவு?

டாலரின் தேவை அதிகரிப்பாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் ரூபாய் மதிப்பு மளமளவெனச் சரிந்தது. இதுவரைஇல்லாத வகையில் ரூபாய் மதிப்பு ரூ80க்கும் கீழ் சென்றது. ரூபாய் சரிவு மேலும் மோசமாகாமல் இருக்க ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை வினியோகம் செய்ததையடுத்து, ரூபாய் மதிப்பு கட்டுக்குள் வந்தது.

சோனியா காந்தி அமலாக்கத் துறையிடம் வைத்த கோரிக்கை என்ன? 2 மணிநேர விசாரணை முடிந்தது

இந்நிலையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஆண்டு மாநாடு இன்று டெல்லியில் தொடங்கியது. இதில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பங்கேற்றார். அப்போது அதில் அவர் பேசியதாவது:

உலகில் நிலம் மோசமான சூழலுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பும் நிலையாகவே இருக்கிறது.

ரூபாய் மதிப்பு ஊசலாட்தத்தில் இருப்பதிலும், சரிவை எதிர்நோக்குவதிலும் ரிசர்வ் வங்கி சமரசம் செய்யாது. ரூபாய் மதிப்பு சரிவைச் சந்தித்தால் உடனடியாக ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலர்களை சந்தையில் வழங்கி மதிப்பு சரிவைத் தடுக்கும்.

ஜிஎஸ்டி வரிக்கு நன்றி: ஆவின் நெய் ரூ.45 அதிகரிப்பு: சூடான தயிர்,மோர் :பட்டியல் இதோ!
எதிர்காலத்தில் வங்கிகள் அனைத்தும் வாடிக்கையாளர் தேர்வின் அடிப்படையில் மாற வேண்டும், வங்கித்துறையி்ன் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் இருக்க வேண்டும்.

இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்
 

click me!