akasa air booking: பறக்கப்போகுது ஆகாசா ஏர்(akasa air) ! ஆகஸ்ட் 7 முதல் சேவைத் தொடக்கம்: கட்டணம் எவ்வளவு?

By Pothy Raj  |  First Published Jul 22, 2022, 12:16 PM IST

பங்குச்சந்தையில் மிகப்பெரிய முதலீட்டாளரான ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாசா விமானம், ஆகஸ்ட் 7ம் தேதி தனது முதல் வர்த்தகச் சேவையை தொடங்குகிறது.


பங்குச்சந்தையில் மிகப்பெரிய முதலீட்டாளரான ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாசா விமானம், ஆகஸ்ட் 7ம் தேதி தனது முதல் வர்த்தகச் சேவையை தொடங்குகிறது.

மும்பை முதல் அகமதாபாத்துக்கு, ஆகாசா விமானமான போயிங் 737மேக்ஸ் விமானம் பறக்கிறது.

Tap to resize

Latest Videos

ஆகாசா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு வரும் 28ம் தேதி முதல் தொடங்குகிற. முதல் பயணச் சேவை ஆகஸ்ட் 7ம் தேதி மும்பை-அகமதாபாத் இடையே தொடங்குிறது. அதன்பின் வாராந்திர சேவை ஆகஸ்ட் 13ம் தேதி பெங்களூரு- கொச்சி இடையே தொடங்குகிறது.

: டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தில் 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு

மும்பை முதல் அகமதாபாத்துக்கு விமானக் கட்டணாக ரூ.3948 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற விமானங்களில் இந்த இடங்களுக்கு ரூ.4,262 கட்டணமாக இருக்கிறது.

முதல் கட்டமாக 4 இடங்களை இணைக்கும் வகையில் விமானச் சேவை தொடங்குகிறது. பெங்களூரு, கொச்சி,அகமதாபாத், மும்பை ஆகிய நகரங்களை இணைத்து முதல்கட்ட சேவை தொடங்குகிறது. 

adani: உலகின் 4-வது கோடீஸ்வரர் கவுதம் அதானி: வழிவிட்ட பில்கேட்ஸ்:ஓர் ஆண்டில் சொத்து இரு மடங்கு அதிகரிப்பு

ஆகாசா ஏர் நிறுவனம் சமீபத்தில் வாங்கிய 737 மேக்ஸ் விமானங்கள்தான் இயக்கப்படுகின்றன. போயிங் நிறுவனம் ஒரு மேக்ஸ் விமானத்தை வழங்கியுள்ளது, 2வது விமானம் இந்த மாத இறுதியில் வரும். 
ஆகாசா ஏர் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பிரவீண் ஐயர் கூறுகையில் “ மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே எங்களின் விமான சேவை ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்குகிறது. எங்களின் புதிய விமானம் போயிங் 737 மேக்ஸ் மூலம் பயணிகள் பயணிக்க இருக்கிறார்கள்.

படிப்படியாக எங்கள் விமானச்சேவை  மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம்செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் புதிதாக இரு விமானங்கள் வரஉள்ளன.அதன்பின் படிப்படியாக விமானச் சேவை விரிவடையும்” எனத் தெரிவித்தார்

இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோபர்ஸ்ட், ஏர்ஏசியாஇ்ந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய பட்ஜெட் விமானநிறுவனங்கள் ஏற்கெனவே சேவையில் இருக்கும் போது 6வதாக தற்போது ஆகாஸா ஏர் நிறுவனம் சேர்ந்துள்ளது.

சிட்ரான் சி3 கார் இந்தியாவில் அறிமுகமானது: விலை என்ன? சிறப்பு அம்சங்கள் என்ன?

72 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் ராகேஷ் ஹூன்ஹூன்வாலா ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த விமானங்கள் அனைத்தும், எரிபொருளை மிச்சப்படுத்தி பறக்கும் சிஎப்எம் லீப் பி ரக எஞ்சனால் வடிவமைக்கப்பட்டவை.

ஆகாஸா ஏர் விமானநிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்த, குறைந்த எரிபொருளில் பறக்கக்கூடிய எஞ்சின்கள் கொண்ட போயிங் 737 மேக்ஸ் விமானம் கடந்த மாதம் 21ம் தேதி வந்து சேர்ந்தது. 2023ம் ஆண்டுக்குள் 18 விமானங்களை வாங்கவும் ஆகாஸா ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.அடுத்த 5 ஆண்டுகளில் 72 விமானங்களை வாங்கவும் ஆகாஸா ஏர் திட்டமிட்டுள்ளது

click me!