டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து 4,500 ஊழியர்கள் விருப்பு ஓய்வு பெற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து 4,500 ஊழியர்கள் விருப்பு ஓய்வு பெற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா குழுமத்தின் வசம் ஏர் இந்தியா நிறுவனம் வந்தபின், நிறுவனத்துக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் இளைஞர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்தது. இதன்படி கடந்த ஜூன் 1ம்தேதி விருப்பு ஓய்வு திட்டத்தை டாடா குழுமம் அறிமுகப்படுத்தியது.
கடந்த ஓரு மாதத்துக்குள் இதுவரை ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து 4500 ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.இன்னும் அடுத்த 2 ஆண்டுகளில் கூடுதலாக 4 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.
டாடா ஏர் இந்தியா குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் “ டாடா நிறுவனம் உற்பத்தியை அதிகப்படுத்தவும், புதிய முறையை, டிஜிட்டல் கலாச்சாரத்தை புகுத்த திட்டமிட்டுள்ளது. மிகப்பெரிய நகரங்களில் இருந்து புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்கும் பணியையும் டாடா தொடங்கிவிட்டது” எனத் தெரிவித்தனர்.
மார்டின் கன்சல்டிங் நிறுவனத்தின் சிஇஓ கூறுகையில் “ ஏர் இந்தியா நிறுவனம் ஏர்பஸ்ஏ350 ஜெட் விமானங்களை வாங்க பரிசீலித்து வருகிறது. போயிங் விமானங்கள் உடற்பகுதி குறுகலாக இருக்கிறது.
ஆதலால் வேறு விமானங்களுக்கு மாறத் திட்டமிட்டுள்ளனர். டிஜி்ட்டல் யுகத்தில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் மனநிலைக்கு ஏற்றார்போல் மாற்றுகிறது.” எனத் தெரிவித்தார்
டாடா குழுமத்தின் டிசிஎஸ், டாடா டிஜிட்டல் நிறுவனங்களில் இருந்தும், கால்சென்டர் கால்களை கையாளவும், இணையதளம், வாடிக்கையாளரை அனுகுதல் ஆகியவற்றுக்காக ஊழியர்களை பணிக்கு எடுக்க இருக்கிறது. வாடிக்கையாளர் சேவையை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்தடுத்துவரும் புதிய விமானநிறுவனங்களுக்கு போட்டியாக செயல்படும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு நடக்கிறது
ஏர்இந்தியா விஆர்எஸ் விதிகளில், 40வயதுக்கு மேற்பட்டவர்கள், தொடர்ந்து 20 ஆண்டுகள் பணியாற்றவர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். விஆர்எஸ் திட்டத்தை ஜூலை 31ம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ.ஒரு லட்சம் வழங்குகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. ஏர் இ்ந்தியா நிறுவனத்தில் 13 ஆயிரம் ஊழியர்களில் 8ஆயிரம் பேர் நிரந்த ஊழியர்கள்.