ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தயிர், நெய், லஸி, மோர் ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது. நெய் லிட்டருக்கு ரூ.45 அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தயிர், நெய், லஸி, மோர் ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது. நெய் லிட்டருக்கு ரூ.45 அதிகரித்துள்ளது.
47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுவரை வரிவிலக்கு அளிக்கப்பட்ட பல பொருட்களுக்கு 5 சதவீதம் வரிவிதிக்கப்பட்டது. இதன்படி, பாக்கெட்டுகளில் அடைத்து, லேபிளுடன் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.
ரூபாய் மதிப்பு சரிவு பொருளாதாரத்துக்கு நல்லதுதான்: நிர்மலா சீதாராமன்
கோதுமை, அரிசி, பால், நெய், மோர், லஸி, லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி, தேன், தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றுக்கு 5 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த பொருட்கள் அனைத்தும் சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்துவை. இவை விலை உயர்ந்ததால்,நடுத்தரக் குடும்பத்தினர், சமானிய மக்களின் மாத பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்தது.
அரிசி, கோதுமை உள்பட 14 பொருட்களை சில்லறையில் விற்றால் ஜிஎஸ்டி வரி இல்லை: சீதாராமன்
ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் கடந்த 3 நாட்களாக எந்த பணிகளும் நடக்காமல் முடங்கியது. இதையடுத்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென நேற்றுமுன்தினம் ஜிஎஸ்டி வரி குறித்து விளக்கம்அளித்தார்.
அதில், “ பாக்கெட்டுகளில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களுக்குத்தான் ஜிஎஸ்டி வரி . சில்லறையில் விற்கப்படும் பொருட்களுக்கு வரி இல்லை” என சீதாராமன் தெரிவித்தார்.
ஆனால், மத்திய அரசு முதலில் விடுத்த அறிக்கையின்படி, பட்டியலிடப்பட்ட உணவுப்பொருட்கள் அனைத்துக்கும், 25 கிலோ அல்லது 25லிட்டருக்கு குறைவாக இருந்தால் 5சதவீதம் ஜிஎஸ்டி வரி என்று தெரிவித்திருந்தது. ஆனால், எதிர்க்கட்சிளின் போராட்டம் வலுக்கவே மத்திய அரசு பல்டி அடித்தது.
இந்நிலையில் ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டதால், தமிழகத்தில் ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக நெய் விலை லிட்டருக்கு 45 ரூபாய் உயர்ந்துள்ளது. மோர், லஸி ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.15 கிலோ நெய் டின், ரூ.1000 உயர்ந்துள்ளது, 5 லிட்டர் நெய் ரூ.350அதிகரித்து, ரூ.2900 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10, 100 கிராம் தயிருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.ப்ரீமியம் தயிர் லிட்டர் 100 ரூபாயிலிருந்து ரூ.120 என அதிகரித்துள்ளது. 500மில்லி பாக்கெட் தயிர் ரூ.30லிருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர மோர் 200மில்லி 10ரூபாயிலிருந்து ரூ12 ஆகவும், இம்யூனிட்டி பட்டர்மில்ஸ் ரூ.18ஆகவும் அதிகரி்த்துள்ளது.லஸி விலையு 200மில்லி ரூ.3 உயர்ந்துள்ளது.