
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு எடுக்கிறது. சேனல் மேனேஜர் பதவிக்காக 641 பேரை வேலைக்கு எடுக்க எஸ்பிஐ வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சேனல் மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஜூன் 7ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://bank.sbi/careers or https://www.sbi.co.in/careers என்ற இணையதள முகவரியில் சென்று அனுப்ப வேண்டும்.
எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள 641 காலியிடங்களில் 503 காலியிடம் சேனல் மேனேஜர் ஃபெசிலிட்டர் பதவியாகும். சேனல் மேனேஜர் சூப்பரவைசர் பதவிக்கு 130 பேர் எடுக்கப்பட உள்ளனர். சப்போர்ட் ஆபிஸர் பணியிடத்துக்கு 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
வயதுத் தகுதி
சேனல் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பவர்களுக்கு வயது 60 முதல் 63 வயது இருக்க வேண்டும். எஸ்பிஐ வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர், அல்லது இ-ஏபிஎஸ் அந்தஸ்திலும், பிற பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்தவர்களும் சேனல் மேனேஜர் பதவி உள்பட 3 பதவிக்கும் விண்ணப்பிக்கலாம். இந்த 3 பதவிக்கும் ஏடிஎம் செயல்பாட்டில் அனுபவம மிகுந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் வரவேற்கப்படுகிறார்கள்
தேர்வு முறை:
சேனல் மேனேஜர் உள்ளிட்ட 3 பணியிடங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவோர், தகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் பணியில் அமர்த்தப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வில் 100 மதிப்பெண் வழங்கப்பட்டு அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பம் செய்வது
ஊதியம்
சேனல் மேனேஜர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ.36ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்
சேனல் மேனேஜர் சூப்ரவைசர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ.41ஆயிரம் மாத ஊதியமாக வழங்கப்படும்.
சப்போர்ட் ஆபிஸர் பதவிக்கு தேர்வாகும் நபருக்கு ரூ.41ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.