akasa air: rakesh: ஆகாசா ஏர், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை ஜூலையில் தொடக்கம்

By Pothy RajFirst Published May 24, 2022, 12:55 PM IST
Highlights

akasa air: rakesh: Rakesh Jhunjhunwala: ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாசா ஏர், ஜெட் ஏர்வேஸ் 2.0 விமான சேவை வரும் ஜூலை மாதம் வர்த்தகரீதியான சேவையைத் தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாசா ஏர், ஜெட் ஏர்வேஸ் 2.0 விமான சேவை வரும் ஜூலை மாதம் வர்த்தகரீதியான சேவையைத் தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாசா ஏர் வேஸ் நிறுவனம் ஜூலை மாதம் தனது முதல் வர்த்தகரீதியான விமான சேவையைத் தொடங்கப்போவதகாவும், முதல் விமானம் ஜீன் மாதம் நடுப்பகுதியில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போர்ட்லாந்தின் போயிங் நிறுவனம் ஆகாசா ஏர் விமானநிறுவனத்துக்காக பிரத்யேகமாக தயாரித்த போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி டிரண்டாகியது 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 18 விமானங்களை வழங்க இருப்தாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

72 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் ராகேஷ் ஹூன்ஹூன்வாலா ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த விமானங்கள் அனைத்தும், எரிபொருளை மிச்சப்படுத்தி பறக்கும் சிஎப்எம் லீப் பி ரக எஞ்சனால் வடிவமைக்கப்பட்டவை.

ஆகாசா விமானநிறுவனமும் விமான சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை டிஜிசிஏ வழங்கியுள்ளது. இதையடுத்து, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் விமான சேவையை இயக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டோடு வர்த்தக ரீதியான விமான சேவையை நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் செப்டம்பர் மாதத்துக்குள் தனது வர்த்தக சேவையை தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக 2-ம்நிலை மற்றும் 3ம்நிலை நகரங்களுக்கு முன்னுரிமை அளித்துதான் ஆகாசா ஏர் விமானத்தின் சேவை இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Can’t keep calm! Say hi to our QP-pie! 😍 pic.twitter.com/sT8YkxcDCV

— Akasa Air (@AkasaAir)

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவையை தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து வருகிறது. நிறுவனத்தின் துணைத் தலைவராக மார்ட் டர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை டிஜிட்டல் அதிகாரியாக பிரப் சரண்சிங்கையும், பொறியியல் பிரிவு துணைத் தலைவராக ஜெகந்நாத்தையும், விற்பனை, வர்த்தகம், வாடிக்கையாளர் பிரிவு துணைத் தலைவராக விகேஷ் கண்ணாவையும் நியமித்துள்ளது.

click me!