davos2022: 30 மணிநேரத்துக்கு புதிதாக ஒரு கோடீஸ்வரர்; 10 லட்சம் மக்கள் வறுமை: ஆக்ஸ்ஃபாம் அதிர்ச்சி அறிக்கை

By Pothy RajFirst Published May 24, 2022, 11:47 AM IST
Highlights

World Economic Forum 2022: davos 2022: கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்திய பாதிப்பால், 2022ம் ஆண்டில் 30 மணிநேரத்துக்கு புதிதாக ஒரு கோடீஸ்வரர் உருவாக்கப்படுகிறார், 33 மணிநேரத்துக்கு ஒருமுறை 10 லட்சம் மக்கள் மிகக்கொடிய வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள் என்று உலக பொருளாதார மாநாட்டில், ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்திய பாதிப்பால், 2022ம் ஆண்டில் 30 மணிநேரத்துக்கு புதிதாக ஒரு கோடீஸ்வரர் உருவாக்கப்படுகிறார், 33 மணிநேரத்துக்கு ஒருமுறை 10 லட்சம் மக்கள் மிகக்கொடிய வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள் என்று உலக பொருளாதார மாநாட்டில், ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

டாவோக் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனல் அமைப்பு” வலி,வேதனையிலிருந்து கிடைக்கும் லாபம்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகளவில் கொரோனா தொற்று மோசமான பாதிப்புகளையும், சமூகத்தில் பெரிய இடைவெளியையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் இருக்கிறது.  உணவு மற்றும் மின், எரிபொருள்துறையில் இருக்கும் கோடீஸ்வரர்கள் ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒருமுறை, அவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி டாலர் அதிகரிக்கிறது

கொரோனா பெருந்தொற்றால் புதிதாக 573 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர்.அதாவது ஒவ்வொரு 30 மணிநேரத்துக்கும் ஒரு புதிய கோடீஸ்வரர் உலகில் உருவாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டுக்குள் 26.30 கோடிக்கும் அதிகமான மக்கள் மிகமோசமான வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது ஒவ்வொரு 33 மணிநேரத்துக்குள் 10 லட்சம் மக்கள் மோசமான வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள்.

கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு, 23 ஆண்டுகளில் உயர்ந்ததைவடி, கொரோனா தொடங்கிய 24 மாதங்களில் உயர்ந்துவிட்டது. ஒட்டுமொத்த உலகக் கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு, உலக பொருளாதார வளர்ச்சியில் ஜிடிபியில் 13.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2000ம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்தது, 2021ம் ஆண்டில் 3 மடங்கு அதிகரித்துவிட்டது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், டோட்டல்எனர்ஜிஸ், எக்ஸான், செவ்ரான் ஆகியவை இணைந்து, ஒவ்வொரு வினாடிக்கும், 2600 டாலர் லாபம் சம்பாதிக்கின்றன. உணவுத்துறையில் புதிதாக 62 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர்.

உலகளவிலான பொருளாதாரச் சந்தையை, கார்கில் குழுமம் 70 சதவீதம் கைப்பற்றியுள்ளது. இந்த குழுமத்தி்ல் 8 கோடீஸ்வரர்கள் இருந்த நிலையில் தற்போது 12 ஆக உயர்ந்துள்ளது. 

இலங்கை முதல் சூடான் வரை அரசியல் மற்றும் சமூக பதற்றம் காரணமா, உணவுப் பொருட்கள் விலை வரலாறுகாணாத வகையில் உயர்ந்துள்ளது. 60% குறைந்த வருமானமுள்ள நாடுகள் கடனில் சிக்கியுள்ளன. 

பணவீக்கம் உலகெங்கும் நிலவுகிறது. குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரம் கொரோனாவில் நசிந்துவிட்டது. குறிப்பாக பெண்கள், ஏழைமக்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஏழை நாடுகளில் வசிக்கும் மக்கள் , பணக்கார நாடுகளில் வசிக்கும் மக்கள் உணவுக்கு செலவிடுவதைவிட, தங்கள் வருமானத்தைவிட இரு மடங்கு உணவுக்காக செலவிடும் சூழல் இருக்கிறது.

2020ம் ஆண்டில் புதிதாக 573 கோடீஸ்வரர்கள் உருவாகி 2,668 கோடீஸ்வரர்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது, இவர்களின் சொத்து மதிப்பு 12.70 லட்சம் கோடி டாலராக அதாவது, 3.78 லட்சம் கோடி டாலர் அதிகரித்துள்ளது. உலகளவில் முதல் 10 இடங்களில் இருக்கும் கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு, மனித சமூகத்தில் அடிமட்டத்தில் வசிக்கும் 40 சதவீத சொத்துக்களுக்கு இணையாக வைத்துள்ளனர். 20 கோடீஸ்வர்களின் சொத்துமதிப்பு, சஹாஹா ஆப்பிரிக்காவின் ஒட்டுமொத்த ஜிடிபிக்கு இணையாக வைத்துள்ளனர்.

டாப்-1 நிலையி்ல் இருக்கும் கோடீஸ்வரர் ஓர் ஆண்டில் சம்பாதித்ததை அடிமட்டத்தில் இருக்கும் 50 சதவீத மக்களில் ஒரு தொழிலாளரி சம்பாதிக்க 112 ஆண்டுகள் தேவைப்படும். கடும் பணிச்சுமை, சமத்துவமின்மை காரணமாக, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் 40 லட்சம் பெண்கள் வேலையிழந்துள்ளனர். அமெரி்க்காவில் கறுப்பினப் பெண்கள் ஒரு மணிநேரத்துக்கு 15 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்.

கொரோனா பெருந்தொற்று மருந்துத்துறையில் புதிதாக 40 கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. மார்டர்னா, ஃபைசர் ஆகிய மருந்து நிறுவனங்கள் வினாடிக்கு 1000 டாலர் லாபம் சம்பாதிக்கின்றன. கொரோனா தடுப்பூசியில் மட்டும் இந்த லாபம் கிடைத்துள்ளது. குறைந்தவருமானம் உள்ள நாடுகளில் 87 சதவீதம் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தாத நிலையில், மருந்து உற்பத்திச் செலவில் 24 மடங்கு கூடுதலாக அரசிடம் வசூலிக்கின்றன

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

click me!