service charge guidelines: சர்வீஸ் சார்ஜ் கட்டாயமில்லை: ஹோட்டல்களுக்குக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை

By Pothy RajFirst Published May 24, 2022, 10:45 AM IST
Highlights

service charge guidelines :ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சர்வீஸ் சார்ஜ் கட்டாயமாக வசூலிக்கக் கூடாது. சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாலர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தருவதாகும். அதை தராமலும் செல்லலாம். அவர்களை வற்புறுத்தக்கூடாது என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சர்வீஸ் சார்ஜ் கட்டாயமாக வசூலிக்கக் கூடாது. சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாலர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தருவதாகும். அதை தராமலும் செல்லலாம். அவர்களை வற்புறுத்தக்கூடாது என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வீஸ் சார்ஜ் என்றால் என்ன? 

ஹோட்டலுக்கு அல்லது ரெஸ்டாரண்ட்களுக்கு நாம் சாப்பிடச் செல்லும்போது நாம் உண்ணும் உணவுக்கு மட்டுமல்ல அதை கொண்டுவந்து நமக்கு பரிமாறும் ஊழியர்(சர்வர்)  செய்யும் சேவைக்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதுதான் சர்வீஸ் சார்ஜ். பெரும்பாலான ஹோட்டல்கள் உண்ணும் உணவில் 10 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கின்றன. 

இது தொடர்பாக ஆலோசிக்க வரும் ஜூன் 2-ம் தேதி தேதி தேசிய ரெஸ்டாரண்ட் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ரெஸ்டாரண்ட்கள், ஹோட்டல்கள் தற்போதும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதாக தொடர்ந்து நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, இந்த எச்சரிக்கையை நேற்று மத்திய அரசு விடுத்துள்ளது. 

நுகர்வோர் விவகாரச் சட்டத்தின்படி, ஹோட்டலுக்கோ அல்லது ரெஸ்டாரண்ட்டுக்கோ வரும் வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக சர்வீஸ்(சேவை)கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. அவ்வாறு வாங்குவது தவறு. சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தருவதாகும், அவர்களை வற்புறுத்தி வாங்கக்கூடாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஹோட்டலுக்கு சாப்பிட வரும்போது அவர்கள் சாப்பிடும் உணவுக்கான கட்டணம் தவிர்த்து, சேவைக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சில ஹோட்டல்கள் சர்வீஸ் சார்ஜை கட்டாயமாக்கிவிட்டன. சர்வீ்ஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாளர்களின் விருப்பம்தான்,அதை விரும்பினால் செலுத்தலாம் அல்லது செலுத்தாமல் செல்லலாம் என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

 அதுவும் இல்லை. அதேநேரம் சர்வீஸ் சார்ஜ் கொடுக்காமல் செல்லும் வாடிக்கையாளர்களிடம், ஹோட்டல் நிர்வாகிகள் தகராறு செய்த சம்பவங்களும், அவர்களை அவமதிப்பு செய்த சம்பவங்களும் தொடர்ந்து நடந்தன. இது தொடர்பாகஏராளமான புகார்கள் மத்திய நுகர்வோர் அமைச்சகத்துக்கு வந்தன

இது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது கட்டாயமில்லை, அது விருப்பத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தருவதாகும். கட்டாயப்படுத்தக்கூடாது என்று ஹோட்டல்களுக்கு மத்திய அ ரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், அதையும் மீறி ஹோட்டல்கள்,ரெஸ்டாரண்ட்கள் சர்வீஸ் சார்ஜ் வாங்கின. 

அப்போது இருந்த மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சரும் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் இது தொடர்பாக தெளிவாக பேட்டியும், விளக்கமும் அளித்திருந்தார். சர்வீஸ் சார்ஜ் என்பதுமுழுமையாக விருப்பத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் ஹோட்டல் நிர்வாகத்துக்கு வழங்குவது. ஹோட்டல், ரெஸ்டாரண்ட் வாடிக்கையாளர்களிடம் கட்டாயப்படுத்தி சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!