Digilocker services on WhatsApp: வாட்ஸ்அப்பில் டிஜிலாக்கர் வசதி: ஒரு மெசேஜில் பான், ஆதார் பதவிறக்கலாம்

Published : May 24, 2022, 10:07 AM ISTUpdated : May 24, 2022, 11:30 AM IST
Digilocker services on WhatsApp: வாட்ஸ்அப்பில் டிஜிலாக்கர் வசதி: ஒரு மெசேஜில் பான், ஆதார் பதவிறக்கலாம்

சுருக்கம்

Digilocker services come to WhatsApp via MyGov Helpdesk: Digilocker services on WhatsApp: digilocker : 9013151515:வாட்ஸ்அப்பில் மூலம் டிஜிலாக்கர் சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒரு மேசேஜ் மூலம் வாட்ஸ்அப் மூலமாகவே டிஜிலாக்கரிலிருந்து பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும்.

Digilocker services on WhatsApp: வாட்ஸ்அப்பில் மூலம் டிஜிலாக்கர் சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒரு மேசேஜ் மூலம் வாட்ஸ்அப் மூலமாகவே டிஜிலாக்கரிலிருந்து பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும்.

மத்திய அரசின் MyGov Helpdesk வழியாக டிஜிலாக்கர் இயக்கப்பட்டு இந்த சேவைகளை வாட்ஸ்அப் மூலம் மக்கள் எளிதாகப் பெறலாம்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மோடியின் அரசு டிஜிட்டல் இந்தியா மூலம் மக்கள் எளிமையாகவும் வசதியாகவும் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, மைகவ் ஹெல்ப்டெஸ்க்(mygov helpdesk) மூலம் வாட்ஸ்அப் வழியாக டிஜிலாக்கர் இயக்கம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் மக்கள் எளிதாக தங்கள் முக்கியச் சான்றிதழை நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம். மைகவர் ஹெல்ப்டெஸ்க் மக்களுக்கு தேவையான ஒருங்கிணைந்த சேவைகள், சிறந்த நிர்வாகம் ஆகியவற்றை டிஜிலாக்கர் சேவை மூலம் வழங்குகிறது.

இதற்கு மக்கள் தங்கள் வாட்ஸ்அப் மூலம் +91 9013151515 என்ற எண்ணுக்கு “Namaste” அல்லது “Hi” அல்லது “Digilocker” என்று டைப் செய்து மெசேஜ் அனுப்பினால் போதுமானது. உடனடியாக mygov helpdesk சேவைகளின் பட்டியல்கள் அனுப்பப்படும். அதில் எந்தவிதமான சான்றிதழ் பதவிறக்கம் செய்ய வேண்டுமோ அந்த எண்ணை டைப் செய்து அனுப்பினால் உடனடியாக பதவிறக்கமாகும். உதாரணமாக ஓட்டுநர் உரிமம் தேவையென்றால், ஓட்டுநர் உரிமம் 4-வது இடத்தில் இருந்தால், 4 என்ற எண்ணை டைப் செய்து அனுப்பினால் போதுமானது.

ஆனால், இந்த வசதியைப் பெறுவதற்கு, ஒருவர் ஏற்கெனவே டிஜிலாக்கரில் இந்த சான்றிதழ்களை பதவிறக்கம் செய்து சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம்.

கொரோனா பரவல் காலத்தில் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு வர முடியாத சூழலில் சான்றிதழ்களை எளிதாகப் பெறுவதற்காக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் mygov helpdesk தொடங்கப்பட்டது. இந்த தளம் மூலம் அதிகாரபூர்வ கொரோநா தடுப்பூசி சான்றிதழ், தடுப்பூசி முன்பதிவு, தடுப்பூசி மையங்கள் உள்ளிட்டவைகளையும் அறியலாம். இதுவரை mygov helpdesk உதவியை நாட்டில் 8 கோடி மக்களுக்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர். 3.30கோடிக்கும் அதிகமான தடுப்பூசி சான்றிதழ்கள் பதவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 

வாட்ஸ்அப்பில் பதவிறக்கம் செய்யும் முறை:

1.    உங்கள் வாட்ஸ்அப்பில்+91 9013151515 என்ற எண்ணை சேமிக்க வேண்டும்.
2.    +91 9013151515 என்ற எண்ணுக்கு “Namaste” அல்லது “Hi” அல்லது “Digilocker” என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்
3.    Digilocker helpdesk வழங்கும் சேவைகளின் பட்டியல் அனுப்பப்படும்.
4.    நமக்குத் தேவையான சேவையின் எண்ணைக் குறிப்பிட்டு பதில் அனுப்பினால் அந்த சான்றிதழ் பதிவிறக்கமாகும்.

 

 

டிஜிலாக்கர் மூலம் என்னென்ன பதவிறக்கம்செய்யலாம்

  • 1. ஆதார் கார்டு
  • 2. பான் கார்டு
  • 3. சிபிஎஸ்இ10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • 4. ஓட்டுநர் உரிமம்
  • 5. இரு சக்கர வாகன காப்பீடு
  • 6. வாகனங்களுக்கான பதிவுச்சான்று (ஆர்சி)
  • 7. கொரோனா தடுப்பூசி சான்று

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு