bike helmet price: ஹெல்மெட் அணிந்தாலும் ரூ.2ஆயிரம் அபராதமா ! என்னய்யா புதுபுதுசா ரூல்ஸ் வருது

By Pothy RajFirst Published May 24, 2022, 1:37 PM IST
Highlights

bike helmet price :இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதுண்டு, அதிலும் கடந்த நேற்றுமுதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பின்னால் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதுண்டு, அதிலும் கடந்த நேற்றுமுதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் பின்னால் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹெல்மெட் அணிந்திருந்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் சாலை விபத்துக்களைத் தடுக்கவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக புதிய விதிகளை அறிமுகப்படுத்தி, இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் எனசட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையலி் 1998மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இரு சக்கரவாகனத்தைஇயக்குபவர் தலைக்கவசத்தை முறையாக அணியாமலோ அதாவது லாக் செய்யாமல் இருந்தாலோ அல்லது ஐஎஸ்ஐ தரச்சான்று பெறாதா தரமற்ற ஹெல்மெட் அணிந்தாலோ ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்று விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது

புதிய விதிகள்

மோட்டார் வாகனச் சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, இரு சக்கர வாகனம் ஓட்டுநபவர் தலைக்கவசத்தை சரியாக அணியாமல் லாக் செய்யாமல்இருந்தால், ஐஎஸ்ஐ அல்லது பிஐஎஸ் தரச்சான்று பெறாத தலைக்கவசத்தை அணிந்தது கண்டறியப்பட்டால், ரூ.2ஆயிரம்வரை அபராதம் விதிக்கலாம்

மோட்டார் வாகனச் சட்டம் 19டி பிரிவின்படி, “ மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் விதிகளைக் கடைபிடிக்காமல் வாகனத்தை இயக்கியது கண்டறியப்பட்டால் பிரிவு 129ன் கீழ் அபராதமாக ரூ.2 ஆயிரமும், 3 மாதம் லைசென்ஸையும் முடக்கி வைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 129 என்ன சொல்கிறது

மோட்டார்வாகனச் சட்டம் 129ன்கீழ், மோட்டார் வாகனம் ஓட்டும் ஒவ்வொரு நபரும், சாலைக்கு வருமப்போது உரிய தலைக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். அந்தத் தலைக்கவசம் உரிய தரச்சான்றுடன் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். தலைக்கவசத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டைகள், லாக் போன்றவை சரியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!