reliance jio laptop launch date: ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் வருது! இவ்வளவுதான விலை?

By Pothy RajFirst Published Oct 3, 2022, 2:44 PM IST
Highlights

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய லேப்டாப்பை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த லேப்டாப்பில் 4ஜி சிம்கார்டு பொருத்தப்பட்ட மாடலில் விற்பனைக்கு கொண்டுவர ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய லேப்டாப்பை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த லேப்டாப்பில் 4ஜி சிம்கார்டு பொருத்தப்பட்ட மாடலில் விற்பனைக்கு கொண்டுவர ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் அதிகமான விலை விற்கும்நிலையில் நடுத்தர மக்கள் வாங்கும் வகையில் மலிவாக ஜியோ நிறுவனம் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. அதேபோன்று இப்போது லேப்டாப்பையும் அறிமுகம் செய்ய இருக்கிறது

அஞ்சல மாதாந்திர வருமான திட்டம்: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க இதோ டிப்ஸ்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சர்வதேச நிறுவனங்களான குவால்காம், மைக்ரோசாப்ட் ஆகியவை இணைந்து லேப்டாப்பை வடிவமைக்கின்றன. குவால்காம் நிறுவனம் சிப்களையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓஎஸ் மற்றும் ஆப்ஸ்களையும் வழங்குகிறது.

இந்தியாவில் 42 கோடி சந்தாதாரர்கள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது லேப்டாப் தயாரிப்பு குறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டது. இந்த லேப்டாப் தயார் நிலையில் இருப்பதால், முதல்கட்டமாக பள்ளிக்கூடங்கள், அரசு நிறுவனங்களுக்கு இந்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.

குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக: ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்

அடுத்த 3 மாதங்களில் சந்தையில் முறைப்படி விற்பனைக்குவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோவின் 5ஜி மொபைல்போன், 5ஜி சேவை நடைமுறைக்குவரும்போது, இந்த லேப்டாப்புகம் விற்பனைக்கு வரும். 


கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த மொபைல் போன் சந்தையில் நல்லவரவேற்பைப் பெற்றது. இதனிடையே பிளெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜியோபுக் தயாரிக்கவும் ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 


கடந்த ஆண்டு மட்டும் வெளிநாடுகளில் இருந்து ஹெச்பி, டெல், லெனோவோ ஆகிய லேப்டாப்கள் மட்டும் இறக்குமதி மதிப்பு 1.48 கோடி டாலர்களாகும். இந்த சந்தையைப் பிடிக்கும் நோக்கில் ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

பிரதமர் கதி திட்டம்: சீனாவிலிருந்து தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் மோடியின் மெகா முயற்சி
ஆமாம், லேப்டாப் விலையைச் சொல்லவே இல்லை என்று கேட்கிறீர்களா!... ரிலையன்ஸ்ஜியோ லேப்டாப் விலை ரூ.15 ஆயிரத்துக்குள் இருக்கும் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. லேப்டாப் வாங்கும்போதே லேப்டாப்பில் 4ஜி சிம்கார்டு பொருத்தப்பட்டு கிடைக்கும். தேவைப்பட்டால் 5ஜி சிம் கார்டு பொருத்திக்கொள்ளலாம்.
 

click me!