குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக, ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் பாஜக, ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரியவந்துள்ளது.
ஆளும் பாஜக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 முதல் 143 இடங்கள் வரைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைக்கும் என்று ஏபிபிநியூஸ் சிஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி பங்கேற்பு
குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செயல்பட்டுவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகபட்சமாக 2 இடங்கள் வரை கிடைக்கும். ஆம்ஆத்மி கட்சியின் வருகையில் குஜராத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி வீதம் சரியும் என்று தெரிவித்துள்ளது.
முலாயம் சிங் உடல்நிலை கவலைக்கிடம்: குருகிராம் மருத்துவமனைக்கு மாற்றம்
182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 36 முதல் 44 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலான மக்கள், குஜராத்தில் முதல்வராக மீண்டும் பூபேந்திர படேல் 2வது முறையாக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1995ம் ஆண்டிலிருந்து குஜராத்தில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக, வரும் தேர்தலிலும் வென்று ஆட்சியைத் தக்கவைத்தால், 7வதுமுறையாக குஜராத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் என்ற பெருமையைப் பெறும்.
கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக 99 இடங்கள் மட்டுமே பெற்ற நிலையில், வரும் தேர்தலில் அதைவிட கூடுதலாக இடங்களில் வெல்லும். அதாவது பாஜக 133 இடங்கள் முதல் 143 இடங்களில் பாஜக வெல்லும்.
தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டியதற்கு ஆதாரம் இல்லை: உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
குஜராத்தில் வரும் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரம் குறிப்பிடத்தக்க பாதிப்பை பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் ஏற்படுத்தும், 3வது பெரிய கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும். ஆம் ஆத்மி கட்சி பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும், 2 இடங்கள் மட்டுமே கிடைக்கும்
கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு 49 சதவீதம் வாக்கு வங்கி கிடைத்தநிலையில் இந்த முறை 46.8சதவீதம் வரை கிடைக்கலாம். காங்கிரஸ் கட்சிக்கு 2017ம் ஆண்டு 41.4% வாக்குகள் கிடைத்தநிலையில் இந்த தேர்தலில் 32.3சதவீதமாகக் குறையலாம். ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக போட்டியிட்டு 17சதவீதம் வாக்குகளைப் பெறலாம்.
காங்கிரஸ் கட்சி 36 முதல் 44 இடங்களில் வெல்லக்கூடும். மற்ற கட்சிகளின் வாக்கு வங்கி 3.5 சதவீதம் வரையில் இருக்கும் 3 இடங்களில் வெல்லக்கூடும்.
குஜராத் முதல்வராக இருக்கும் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக வருவதற்கு 34.6% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மிவேட்பாளருக்கு 15.6% பேரும், முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு 9.2% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் சக்தி சிங் கோகிலுக்கு 4.9% பேரும், சோலங்கிங்கு 4 சதவீதம் பேரும், சிஆர் பாட்டீலுக்கு 3.7 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு 99 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்களும் கிடைத்தன. சுயேட்சை 3 இடங்களிலும், பிடிபி கட்சி 2இடத்திலும், என்சிபி கட்சி ஒரு இடத்திலும் வென்றன