
ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி வீதத்தை உயர்த்திவந்தால், பொருளாதார வளர்ச்சி வேகம் குறையக்கூடும் என்று நிதித்துறை செயலாளர் டி.வி. சோமநாதன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அளவு வைத்திருக்கிறது.
ஆனால், ஜனவரி மாதத்திலிருந்து பணவீக்கம் 6 சதவீதத்தை கடந்து வருகிறது, உச்ச கட்டமாக மார்ச் மாதம் 6.95 சதவீதத்தையும், ஏப்ரல் மாதம் 7.79 சதவீதத்தையும் எட்டியது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வட்டி வீதத்தில் 40 புள்ளிகளை உயர்த்திவிட்டது.
ஏப்ரல் மாதத்திலும் பணவீக்கம் 7.49 சதவீதமாக உயர்ந்திருப்பதிருப்பதால், ஜூன் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி மேலும் வட்டி வீதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக கடனுக்கான வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தாமல் 4.0 என்ற வீதத்திலேயே இருந்தது. பணவீக்கத்தை குறைத்து கட்டுக்குள் கொண்டுவருவதற்காக 40 புள்ளிகளை கடந்த வாரம் ரிசர்வ் வங்கி உயர்த்தியது. ஜூன் மாதத்திலும் வட்டிவீதம் உயரக்கூடும் ஆனால், எவ்வளவு என்பது தெரியவில்லை.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்துவது குறித்து நிதிச்செயலாளர் டி.வி. சோமநாதன் நேற்று தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் “ நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தலாம். ஜுன் மாதத்தில்கூட நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதத்தை உயர்த்தும் என்று தகவல்கள் வருகின்றன. ஆனால், தொடர்ந்து வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.