NSE Scam: ஆதாரங்களை அழித்துவிடுவார்: சித்ரா, ஆனந்த் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

Published : May 13, 2022, 11:02 AM IST
NSE Scam: ஆதாரங்களை அழித்துவிடுவார்:  சித்ரா, ஆனந்த்  ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்

சுருக்கம்

NSE Scam : தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, உதவியாளர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, உதவியாளர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தள்ளுபடி

சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். சித்ரா ராமகிருஷ்ணனுக்கு இது முதல் ஜாமீன் மனு, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு இது 2-வது ஜாமீன் மனுவாகும்.சித்ரா ராம்கிருஷ்ணாவின் ஜாமீன் மனு சிஆர்பிசி 439 பிரிவில் விசாரிக்கப்பட்டது, அதேபோல, ஆனந்த் சுப்பிரமணியத்தின் ஜாமீன் மனு சிஆர்பிசி 437 439 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டது. 

கோலொகேஷன் ஊழல்

என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன. 

இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்தால், கோடிக்கணக்கில் லாபமீட்டின.இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வந்தது.

இதற்கிடையே சித்ரா தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். அவருக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரி்த்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்தது.

கைது

கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியம், சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தியது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.ஏற்கெனவே சித்ரா ராமகிருஷ்ணா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருந்தது, ஆனந்த் சுப்பிரமணியன் ஏற்கெனவே தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சிபிஐ எதிர்ப்பு

இருவருக்கும் ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் வாதிடுகையில் “ சித்ரா சமூகத்தில் மிகவும் செல்வாக்கானவர் அவருக்கு ஜாமீன் வழங்கினால், ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்க நேரிடலாம், அல்லது சாதகமாக மாற்றலாம். சாட்சியங்களையும் பிறழ்சாட்சியாக மாற்றலாம். ஆதலால், ஜாமீன் வழங்கக்கூடாது. அவ்வாறு ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும்.

என்எஸ்இ கோலொகேஷன் வழக்கில் என்எஸ்இ அதிகாரிகள் பலரை விசாரித்து வருகிறோம். இந்த நேரத்தில் சித்ராவுக்கு ஜாமீன் வழங்குவது விசாரணையை பாதிக்கும். முழுமையாக உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து, சித்ரா ராம்கிருஷ்ணா, ஆனந்த் இருவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பையும் நீதிபதி சஞ்சீவ் அகர்வால் ஒத்திவைத்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இருவருக்கும் ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி அகர்வால் மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!