india inflation : பணவீக்கத்தால் ஏழைகளைவிட பணக்காரர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்: நிதி அமைச்சகம் வருத்தம்

By Pothy RajFirst Published May 13, 2022, 10:04 AM IST
Highlights

india inflation : நாட்டில் நிலவிவரும் பணவீக்கத்தால் நடப்பு நிதியாண்டில் ஏழைகளைவிட பணக்கார்ரகளே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்று மத்திய நிதி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டில் நிலவிவரும் பணவீக்கத்தால் நடப்பு நிதியாண்டில் ஏழைகளைவிட பணக்கார்ரகளே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்று மத்திய நிதி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பணவீக்கம் உயர்வு

நாட்டில் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அளவு வைத்திருக்கிறது.

 ஆனால், ஜனவரி மாதத்திலிருந்து பணவீக்கம் 6 சதவீதத்தை கடந்து வருகிறது, உச்ச கட்டமாக மார்ச் மாதம் 6.95 சதவீதத்தையும், ஏப்ரல் மாதம் 7.79 சதவீதத்தையும் எட்டியது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வட்டி வீதத்தில் 40 புள்ளிகளை உயர்த்திவிட்டது. 

வட்டி வீதம் உயர்வு

ஏப்ரல் மாதத்திலும் பணவீக்கம் அதிகமாக உயர்ந்திருப்பதிருப்பதால், ஜூன் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி மேலும் வட்டி வீதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் சில்லரைப் பணவீக்கம் 7.79 சதவீதமாக உயர்ந்திருப்பது இதுதான் முதல்முறையாகும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்துக்கான மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் வெளியி்ட்டுள்ளது.

பணக்காரர்களே பாதிப்பு

அதில் “ நடப்பு நிதியாண்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வால் ஏழைகளைவிட பணக்காரர்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். நுகர்வு அடிப்படையிலான புள்ளிவிவரங்களை எடுத்து ஆய்வு செய்தால், இந்தியாவில் நிலவும் பணவீக்கத்தால் குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினரைவிட,அதிகமான வருமானம் ஈட்டும்  பிரிவினரே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

முரண்பாடு

ஆனால், கடந்த 4ம் தேதி ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் வெளியிட்ட அறிக்கையில் “ நாட்டில் நிலவும் உயர்ந்த பணவீக்கத்தால் ஏழை மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.அவர்களின் வாங்கும் சக்தி அழிக்கப்படுகிறது” என்று கவலைத் தெரிவித்திருந்தார். ஆனால், மத்திய நிதிஅமைச்சகமோ பணக்காரர்கல்தான் பணவீக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று வருத்தம் தெரிவிக்கிறது. மத்திய நிதிஅமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் முரணாகக் கருத்துத் தெரிவித்துள்ளன.

3 பிரிவினர்

மத்திய நிதிஅமைச்சகம் தனது ஆய்வறிக்கையில் 2011-12ம் ஆண்டு தேசிய சாம்பிள் சர்வேயின் வீடுகளில் நுகர்வோர் செலவினங்கள் விவரங்களை அடிப்படையாக வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய நுகர்வோர்களை 3 பிரிவுகளைப் பிரிக்கிறது. முதல் 20 சதவீதம் பேர் பணக்காரர்கள், 60 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர், 20 சதவீதம் குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினர். இவர்களின் செலவினங்களும் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, உணவு மற்றும் பானங்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் போக்குவரத்து, உணவு எரிபொருள் தவிர மற்ற செலவினங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன

கடந்த 2 ஆண்டுகளாக நிலவும் பணவீக்கத்தை அடிப்படையாக நகர்புற மற்றும் கிராப்புறங்களை பிரித்து  நிதிஅமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

1.    வருமானம் குறைவாக இருக்கும் 20 சதவீதம் பிரிவில் கிராமப்புறங்களி்ல இருக்கும் நுகர்வோர்களுக்கான பணவீக்கம் 2021 நிதியாண்டில் 6 சதவீதத்திலிருந்து2022 நிதியாண்டில் 5.2 சதவீதமாகவும், நகர்புறங்களில் பணவீக்கம் 2021ம் ஆண்டில் 6.8 சதவீதத்திலிருந்து 2022ம் ஆண்டில் 5.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

2.    நடுத்தரப்பிரிவில் இருக்கும் 60 சதவீதம் பேரில் கிராமப்புறங்களில் இருக்கும் நுகர்வோர்களுக்கு பணவீக்கம் 2020-21 ஆண்டில் 5.9 சதவீதமாக இருந்தது, 2022ம் நிதியாண்டில் 5.3 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. நகர்ப்புறங்களில் 6.8 சதவீதமாகஇருந்தது, 5.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது

3.    உயர்பிரிவில் இருக்கும் 20 சதவீதம்பேரில் கிராமப்புற நகர்ப்புறங்களில் இருக்கும் நுகர்வோருக்கு பணவீக்கம் 2021ம் நிதியாண்டில் 5.50 சதவீதமாக இருந்தது,2022ம் ஆண்டில் 5.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில் இருக்கும் நுகர்வோர் பணவீக்கம் 6.5 சதவீதமாக இருந்தது, 5.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது
 

click me!