
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நட்சத்திர (*) குறி கொண்ட ரூபாய் நோட்டுகளும் மற்ற சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுகளைப் போலவே செல்லுபடியாகும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஜூலை 27 அன்று, ஆர்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர் பகுதியில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையில் ஒரு நட்சத்திரக் குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஸ்டார் குறியீடு, மாற்றப்பட்ட அல்லது மறு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டு என்பதற்கான அடையாளமாகும் என்று ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகுமா என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ள நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.கே.மிஸ்ரா பதவி நீட்டிப்புக்கு அனுமதி: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்
ரூபாய் நோட்டுகள் 100 நோட்டுகள் கொண்ட கட்டுகளாக வெளியிடப்படுகின்றன. அவற்றில் வரிசையான எண்கள் கொண்ட நோட்டுகளாக இருக்கும். இவ்வாறு அச்சிட்ட நோட்டுகளில் குறைபாடுள்ளவை கண்டறியப்பட்டால், அவற்றுக்கு மாறாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் சீரியல் நம்பர் பகுதியில் நட்சத்திரக் குறியீடு சேர்க்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய ரூபாய் நோட்டுகள் வரிசையாக எண்ணிடப்பட்டவையாக இருக்கும். ஒவ்வொன்றும் எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்ட ஒரு தனித்துவமான வரிசை எண்ணைக் கொண்டிருக்கும். ஸ்டார் அடையாளம் உள்ள ரூபாய் நோட்டுகளும் மற்ற நோட்டுகளைப் போலவே இருக்கும். ஆனால் சீரியல் நம்பரில் முன்னொட்டுக்கும் வரிசை எண்ணுக்கும் இடையே ஸ்டார் குறியீடு சேர்க்கப்பட்டிருக்கும்.
சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்குத் தூக்கு! 20 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.