ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு: கடன் வாங்கியவர்கள் ஹேப்பி!

By Manikanda Prabu  |  First Published Sep 13, 2023, 5:06 PM IST

கடனை திருப்பி செலுத்தியவுடன் அனைத்து ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் திருப்பி தர வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது


தனிநபர் தங்களது கடன் கணக்குகளை முழுமையாக முடித்தவுடன் அவரிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து அசையும்/அசையா சொத்து ஆவணங்களை 30 நாட்களுக்குள் முழுமையாக திருப்பி தர வேண்டும் என அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

தாமதம் ஏற்படும் பட்சத்தில் நிதி நிறுவனங்கள் கடன் வாங்குபவருக்கு ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் ரூ.5,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

“கடனை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கு அவர்களின் ஆவணங்களை திருப்பிக் கொடுப்பதில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வேறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிக்கல்களையும் துயரங்களையும் எதிர்கொள்கின்றனர்.” என அந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடன் முடிந்ததும், அசல் ஆவணங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ரிசர்வ் வங்கி, ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு, இடம் ஆகியவை கடன் அனுமதி கடிதங்களில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதனை வங்கிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

நவம்பர் 1 முதல் ஜிஎஸ்டி தொடர்பான விதிகளில் பெரிய மாற்றம்.. என்னென்ன தெரியுமா.? முழு விபரம் இதோ !!

மேலும், “அசையும் அல்லது அசையா சொத்துகளின் பேரில் கடன் வாங்கியவர்கள், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள் அவர்களது அசல் ஆவணங்களை அவர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும். தாமதத்திற்கு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் காரணமாக இருந்தால், கடன் பெற்றவருக்கு ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் ரூ.5,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.” எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விதிவிலக்கான சில நேர்வுகளில் வங்கிகளுக்கு அசல் ஆவணங்களை திருப்பதித் தர கூடுதலாக 30 நாட்கள் தரப்படும். அதாவது மொத்தம் 60 நாட்கள் வழங்கப்படும். அதற்குள் அசல் ஆவணங்களை ஒப்படைத்து விட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

click me!