அரசியலில் நோ இன்ட்ரெஸ்ட்.. ஷூ பிசினஸ் துவங்கும் தயாநிதியின் வாரிசுகள் - விலை கேட்டா லைட்டா தலை சுத்தும்!

By Ansgar RFirst Published Sep 10, 2023, 11:14 PM IST
Highlights

பிரபல அரசியல் தலைவர் தயாநிதி மாறன் அவர்கள், மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. திராவிட முன்னேற்ற கழக குடும்பத்தில் பிறந்த தயாநிதி மாறன் தொடர்ச்சியாக நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் தனது தந்தையைப் போல மத்திய அமைச்சராகவும் செயல்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்ட இவருக்கு கரண் மற்றும் திவ்யா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

ஆனால் இவர்கள் இருவருமே தங்கள் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் பயணிக்காமல் தங்களுக்கு என்று தனி பாதை ஒன்று அமைத்து பயணித்து வருகின்றனர். ஆம் வெளிநாட்டில் படித்து வரும் திவ்யா தயாநிதி மாறன் மற்றும் கரண் தயாநிதி மாறன் ஆகிய இருவரும் தற்பொழுது ஷூ கம்பெனி ஒன்றை துவங்கியுள்ளனர். 

Latest Videos

ஒருகாலத்தில் ஹோட்டலில் சர்வர் வேலை.. இன்று அம்பானி, டாட்டாவோடு தொழில் பார்ட்னர் - யார் இந்த Jensen Huang?

வெறும் 22 வயது நிரம்பிய திவ்யா தயாநிதி மாறன் மற்றும் வெறும் 19 வயது நிரம்பிய கரன் தயாநிதி மாறன் ஆகிய இருவரும் இணைந்து இந்திய சந்தையில் தங்களது K-KIX என்ற ஸ்னீக்கர் நிறுவனத்தை துவங்க உள்ளனர் ஏற்கனவே. 

K-KIXல், ஷூ எனப்படும் ஸ்னீக்கர்ஸ் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களின் இஷ்டத்திற்கு ஏற்ப ஸ்னீக்கர்களை வடிவமைத்துகொள்ளலாம். அதற்கு தகுந்தாற் போல அந்த தளம் விரிவான வடிவமைப்பு செயல்முறையை வழங்குகிறது, இது பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வண்ணங்கள் முதல் டிசைன் வரை அனைத்தையும் தேர்வு செய்ய உதவும்.

மற்ற ஸ்னீக்கர் பிராண்டிலிருந்து, K-KIX ஐ வேறுபடுத்துவது எது என்று பார்த்தால், அது கஸ்டமர்களின் எண்ணத்தை சட்டென்று கவரும் விதம் தான். அதே போல K-KIX நிறுவனம், ஆர்டர்கள் பெறப்பட்ட 10 நாட்களில் அந்த ஸ்னீக்கர் வாடிக்கையாளருக்கு சென்று சேரும் என்றும் தெரிவித்துள்ளது மிகசிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

எங்களிடம் உள்ள அட்வான்ஸ் அச்சிடும் எந்திரங்கள், மற்றும் கைவினை கலைஞர்களால், நிச்சயம் வாடிக்கையாளர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்ய எங்களால் முடியும் என்று அந்த குழுவில் உள்ள நிவேதா என்ற பெண் கூறியுள்ளார். மேலும் இந்த ஸ்னீக்கர்களின் ஆரம்ப விலை சுமார் 17,000 ரூபாயில் துவங்கி 40,000 வரை விற்பனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெல்ட் ரோடு மூலம் ஒரு பயனும் இல்லை! சீனாவை கழட்டி விட்டு இந்தியாவுடன் கைகோர்க்கும் இத்தாலி!

click me!