ஒருகாலத்தில் ஹோட்டலில் சர்வர் வேலை.. இன்று அம்பானி, டாட்டாவோடு தொழில் பார்ட்னர் - யார் இந்த Jensen Huang?

By Ansgar R  |  First Published Sep 10, 2023, 6:59 PM IST

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் டாடா குழுமம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான Nvidiaவுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. Nvidiaவின் தலைவர் தான் தைவான்-அமெரிக்க கோடீஸ்வரர் ஜென்சன் ஹுவாங். அண்மையில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது சந்திப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


முகேஷ் அம்பானி தலைமையிலான ஆர்ஐஎல் மற்றும் ரத்தன் டாடா, என் சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமத்துடன் தனது நிறுவனம் இணைந்த பிறகு, இந்தியா "உலகின் மிகப்பெரிய AI சந்தைகளில் ஒன்றாக மாறும்" என்று ஜென்சன் ஹுவாங் கண்டித்துள்ளார். இந்த அமெரிக்க கிராபிக்ஸ் சிப் தயாரிப்பாளரும், சிறந்த இந்திய நிறுவனங்களும் இணைந்து Nvidia தொழில்நுட்பத்தின் அடிப்படையில் AI தீர்வுகளை உருவாக்க AI கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு மற்றும் தளங்களில் இணைந்து பணியாற்றும்.

RIL மற்றும் Tata Communications ஆகியவை என்விடியாவின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் "அதிநவீன AI சூப்பர் கம்ப்யூட்டிங் தரவு மையங்களை உருவாக்கி இயக்கும்" என்று ஒரு அந்தந்த நிறுவனத்தின் வெளியீடுகள் கூறுகின்றது.

Tap to resize

Latest Videos

சரி யார் இந்த ஜென்சன் ஹுவாங்?

ஹுவாங், தற்போது இவர் தான் உலகின் 26வது பணக்காரர் ஆவர். இந்த கோடீஸ்வரரின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு சுமார் 40.7 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3,38,000 கோடிக்கும் மேல்). அவர் கடந்த 1993ல் தான் முதல்முதலாக என்விடியா நிறுவனத்தை நிறுவினார். இந்நிறுவனம் இன்று சுமார் $1.125 டிரில்லியன் (ரூ. 9351500 கோடிக்கு மேல்) சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. ஹுவாங் தொடக்கத்தில் இருந்தே என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தலைவராகவும் இருந்து வருகிறார்.

ஹுவாங் தைவானில் பிறந்தவர,  ஆனால் ஒருகட்டத்தில் அவர் தன் குடும்பத்தோடு தாய்லாந்திற்கு குடிபெயர்ந்தார். ஆனால், தாய்லாந்திலும் ஏற்பட்ட அமைதியின்மை பிரச்சனை காரணமாக அவரும் அவரது சகோதரரும் அமெரிக்காவிற்கு அவரது குடும்பத்தால் அனுப்பப்பட்டனர். தற்போது 60 வயதான ஹுவாங், தன் சொந்த உழைப்பில் உருவெடுத்த கோடீஸ்வரர். 

அவர் ஒரேகான் மாநில பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். ஹுவாங் ஒருகாலத்தில் டென்னிஸ் என்ற உணவகத்தில் சர்வராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!