ரூ.19,000 கோடி சொத்து! இந்தியாவின் 3வது பணக்கார பெண்.. அட நம்ம சென்னையை சேர்ந்தவங்க தான்..

By Ramya s  |  First Published Aug 4, 2023, 10:42 AM IST

Zoho நிறுவனத்தில் 47.8 சதவீத பங்குகளை ராதா வேம்பு  வைத்திருக்கிறார்.


பிரபல சாஃப்ட்வேர் நிறுவனமான Zoho-வின் இணை நிறுவனரான ராதா வேம்பு, இந்தியாவின் 3-வது பணக்காரப் பெண்மணியாக உள்ளார். சென்னையை சேர்ந்த அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ. 19,000 கோடி (2.2 பில்லியன் டாலர்). ராதா வேம்பு Zoho CEO ஸ்ரீதர் வேம்புவின் சகோதரி ஆவார். M3M Hurun Global Rich பட்டியலின் படி, ராதா வேம்பு, மென்பொருள் மற்றும் சேவைத் துறையில் உலகின் இரண்டாவது பணக்கார பெண்மணி ஆவார். Zoho நிறுவனத்தில் 47.8 சதவீத பங்குகளை ராதா வேம்பு  வைத்திருக்கிறார், அதே சமயம் அவரது சகோதரர் ஸ்ரீதர் வேம்பு வெறும் 5 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். ராதா வேம்புவின் மற்றொரு சகோதரர் சேகரும் Zoho நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார்.

2022 ஆம் ஆண்டில், Zoho நிறுவனம் 2700 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது. ஸ்ரீதர் வேம்பு 1996-ம் ஆண்டில் Zoho நிறுவனத்தை தொடங்கினார், அந்த நேரத்தில் நிறுவனத்தின் பெயர் AdventNet. ராதா வேம்பு ஐஐடி மெட்ராஸில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். Zoho Mail என்ற மின்னஞ்சல் சேவையின் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிகிறார். Zoho நிறுவனம் மைக்ரோசாப்ட், ஆரக்கிள், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் பல பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக கருதப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மாதம் ரூ.19 கோடி சம்பளம் வாங்கும் CEO! அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்களில் ஒருவர்!

ராதா வேம்பு 1972-ம் ஆண்டில் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை சாம்பமூர்த்தி வேம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தாளராக இருந்தார். ராதா வேம்பு தமிழ்நாட்டின் சென்னையில் வசிக்கிறார். சென்னையில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார். ராதா வேம்பு ஜானகி ஹைடெக் அக்ரோ பிரைவேட் லிமிடெட் (Janaki Hi-Tech Agro Pvt Ltd) என்ற  விவசாய தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் ஹைலேண்ட் வேலி கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் (Valley Corporation Pvt Ltd) நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.  ஜானகி ஹைடெக் அக்ரோ மார்ச் 22, 2011 இல் தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் ஏப்ரல் 2012 இல் தொடங்கப்பட்டது.

Forbes உலக பில்லியனர்கள் பட்டியலின் படி, ராதா வேம்பு இந்தியாவின் மூன்றாவது பணக்கார பெண்மணியாக உள்ளார். அந்த பட்டியலின் படி, ஏப்ரல் 2023 நிலவரப்படி, ராதா வேம்புவின் நிகர மதிப்பு தோராயமாக $2.2 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,000 கோடி ஆகும். இதனால் அவர் இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவராக உள்ளார்.

38 விமானங்கள், 300 கார்கள், 52 படகுகள்.. இந்த உலகப் பணக்காரரின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

click me!