என்டிடிவி சேனல் நிறுவனத்தை அதானி குழுமம் வாங்குவதைத் தொடர்ந்து ஆர்ஆர்பிஆர்(RRPR)அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பொறுப்பிலிருந்து பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோர் விலகியுள்ளனர்.
என்டிடிவி சேனல் நிறுவனத்தை அதானி குழுமம் வாங்குவதைத் தொடர்ந்து ஆர்ஆர்பிஆர்(RRPR)அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பொறுப்பிலிருந்து பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோர் விலகியுள்ளனர்.
இந்த தகவலை பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியிடம் என்டிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்டிடிவி நிறுவனத்தின் புதிய இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா, செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று என்டிடிவி செபியிடம் தெரிவித்துள்ளது.
என்டிடிடி நிறுவனம் சார்பில் ஆங்கிலத்தில் ஒரு செய்தி சேனலும், இந்தியில் ஒருசெய்தி சேனலும், என்டிடிவி பிராபிட் என்ற வர்த்தகத்துக்கான ஒரு சேனலும்இயங்கி வருகிறது.
இந்நிலையில் அதானி குழுமம் கடந்த சில மாதங்களாகத்தான் ஊடகத் துறையில் தடம் பதித்து, அதானி மீடியா வென்சர்ஸ் என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறது
என்டிடிவி ஒப்புதல் இல்லாமல் 29% பங்குகளை வாங்கிய அதானி குழுமம் : விவரம் என்ன?
இந்நிலையில் என்டிடிவி உரிமையாளர் பிரனாய் ராய்(15.94%) அவரின் மனைவி ராதிகா(16.32%) ஆகியோர் நடத்தும் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 29.18 சதவீதப் பங்குகள் உள்ளன. மீதமுள்ள 61.45 சதவீதப் பங்குகள் பிறநிறுவனங்கள், முதலீட்டாளர்கள் வசம் உள்ளன.
ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடந்த 2009 -ம் ஆண்டு தனது கைவசமுள்ள 29.18 சதவீத என்டிடிவி பங்குகளை விஷ்வபிரதான் கமர்சியல் லிமிடெட் (VCPL) நிறுவனத்திடம் அடமானம் வைத்து 403 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தது.
அதானி குழுமத்தின் சார்பில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் மறைமுகமாக நடத்தப்படுவதுதான் இந்த விஷ்வபிரதான் கர்ஷியல் லிமிடட் நிறுவனம்.
‘ஹாஸ்டைல் டேக்ஓவர்’ என்றால் என்ன? இப்படித்தான் என்டிடிவியை கபளீகரம் செய்ததா அதானி குழுமம்
விபிசிஎல் நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாக என்டிடிவிக்கு நிர்ணயக்கப்பட்டு அதற்குரிய காலமும் முடிந்துவிட்டது. கடனை ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனம் திரும்ப செலுத்தாத காரணத்தினால் தற்போது விசிபிஎல் நிறுவனம் அந்தப் பங்குகளை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்தது.
இந்நிலையில் அதானி குழுமம், என்டிடிவியின் கூடுதலாக 26 சதவீதப் பங்குகளை வெளிச்சந்தையில் வாங்குவதற்கு கடந்த 22ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது, இந்த காலம் டிசம்பர் 5ம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில் என்டிடிவியின் இயக்குநர்கள் பொறுப்பிலிருந்து பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோர் விலகுவதாக நேற்றுமாலை செபி-யில் என்டிடிவி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதானி குழும அறிவிப்பு! என்டிடிவி பங்கு 14 ஆண்டுகளில் இல்லாதஉயர்வு: அடுத்து என்ன நடக்கும்?
அந்த அறிக்கையில் “ என்டிடிவியின் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் பிரைவேட் லிமிடட் இயக்குநர்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறுவனத்தின் இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா, செந்தில் சின்னையா செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. ராதிகா ராய், பிரணாய் ராய் இருவரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது