டிசம்பர் 1ஆம் தேதி பரிசோதனை முயற்சியாக நாட்டில் சில்லறை டிஜிட்டல் ரூபி(e₹-R) அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதி பரிசோதனை முயற்சியாக நாட்டில் சில்லறை டிஜிட்டல் ரூபி(e₹-R) அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக மத்திய வங்கி டிஜிட்டல் கரன்ஸி(டிபிடிசி) மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ரிசர்வ் வங்கி தரப்பில் சிபிடிசி எனப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்ஸி அல்லது டிஜிட்டல் ரூபி உருவாக்கப்படும். மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி(cbdc) பிளாக்செயின் தொழில்நுட்பம் மூலம், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்று அறிவித்திருந்தார்.
வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை! நிப்டி, சென்செக்ஸ் புதிய சாதனை! உலோகப் பங்கு ஜோர்
டிஜிட்டல் ரூபி என்றால் என்ன?
டிஜிடிடல் ரூபி அல்லது மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி(சிபிடிசி), அல்லது விர்ச்சுல் கரன்சி அனைத்தும் ஒன்றுதான். இந்த டிஜிட்டல் ரூபாயை சில்லரை வணிகத்துக்கு பயன்படுத்தலாம். காகித கரன்சியைப் போல் பயன்படுத்த முடியும். இந்த டிஜிட்டல் ரூபாய் டிஜிட்டல் டோக்கன் வடிவத்தில் இருக்கும். ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ ரூபாய் நோட்டுகளில் இருப்பதைப் போன்று சீரியல் எண், யுனிட்கள், தனிப்பட்ட எண்கள் ஆகியவை டிஜிட்டல் ருபியிலும் வழங்கப்படும். இந்த யுனிட்கள் டிஜிட்டல் வடிவில் வெளியிடப்பட்டு, கரன்சி புழக்கத்தோடு சேர்க்கப்படும்.
எப்படி பயன்படுத்தலாம்?
ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி டிஜிட்டல் ரூபாயை டிஜிட்டல் வாலட்கள் மூலம் பயன்படுத்த முடியும். இந்த வாலட்களை டிஜிட்டல் ரூபாய் பரிமாற்றத்தில் பங்கெடுக்கும் வங்கிகள் மூலம் வழங்கப்படும். இந்த டிஜிட்டல் ரூபாயை ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே பரிமாற்றம் செய்யலாம், ஒரு பொருளை, சேவையை வாங்கிவிட்டு, அதற்கு ஈடாகவும் வர்த்தகருக்கும் பரிமாற்றம் செய்யலாம்.
டிஜிட்டல் ரூபாய் எப்படி செயல்படும்?
பிளாக்செயின் மூலம் அனைத்துவிதமான பரிமாற்றங்களையும் கட்டுப்படுத்த முடியும். தனியார் நிதி நிறுவனங்கள் போல் அல்லாமல், ஆர்பிஐ , டிஜிட்டல் ரூபாயைப் பொறுத்தவரை, நீங்கள் டிஜிட்டல் கரன்சியை வைத்திருந்தால், அது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
எந்த பரிமாற்றமும்,யாருக்குச் செய்தாலும், அது ரிசர்வ் வங்கியின் டேட்டா மையத்தில் பதிவாகும். ஒருவர் தங்களின் பர்ஸில் பணம் வைத்திருப்பதற்கு பதிலாக, மொபைலில் பணம் வைத்திருப்பார்.
ஜிஎஸ்டி கவுன்சில் டிசம்பர் 17ம் தேதி கூடுகிறது: ஆன்லைன் கேமுக்கு 28% வரி விதிக்கப்படுமா?
எந்தெந்த வங்கிகள் வழங்குகின்றன?
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி, டிஜிட்டல் ரூபாயை 8 வங்கிகள் வழங்குகின்ற. முதல்கட்டமாக எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐவங்கி, யெஸ்வங்கி, ஐடிஎப்சி வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, கோடக் மகிந்திரா வங்கிகள் பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்கின்றன
நாடுமுழுவதும் அறிமுகமா?
இல்லை. முதல் கட்டமாக மும்பை, புதுடெல்லி, பெங்களூரு, புவனேஷ்வர் ஆகிய 4 நகரங்களில் மட்டும் டிஜிட்டல் ரூபாய் அறிமுகமாகிறது. அதன்பின் அகமதாபாத், காங்டாக், குவஹாட்டி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா, ஷிம்லா ஆகிய நகரங்களில் அறிமுகமாகும். படிப்படியாக பல்வேறு நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பரிசோதனை முயற்சி என்பதால் குறிப்பிட்ட குழுக்களுக்குஇடையே மட்டும்தான் பரிமாற்றம் நடக்கும்.
டிஜிட்டல் கரன்சியும் கிரிப்டோகரன்சியும் ஒன்றா?
டிஜிட்டல் ரூபாய் என்பது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் விர்ச்சுவல் கரன்சி. இது தனியார் வெளியிடும் விர்ச்சுவல் கரன்சிகள் அதாவது கிரிப்டோகரன்சிகளைவிட வேறுபட்டது. குறிப்பாக பிட்காயின், எத்திரியம் உள்ளிட்டவற்றில் இருந்து வேறுபட்டது. ரிசர்வ் வங்கி வெளியிடும் டிஜிட்டல் கரன்சி மதிப்பு மாறாமல் நிலையாக இருக்கும்.
சிபிடிசி என்பது தனியார் கிரிப்டோகரன்சியான பிட்காயின், எதிரியத்தைவிட வேறுபட்டது. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிட்டப்படும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் கரன்சி சிபிடிசி. தனியார் வெளியிடும் கிரிப்டகரன்சிகளுக்கு நிலையான மதிப்பு இல்லை, யாரும் கட்டுப்படுத்துவது இல்லை. ஆனால், சிபிடிசிக்கு நிலையான மதிப்பு இருக்கும், அரசால் கட்டுப்படுத்தப்படும்