தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, PhonePe நிறுவனம் ரூ.9-ல் பட்டாசு இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பட்டாசு விபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெறலாம். குடும்ப உறுப்பினர்கள் உட்பட நான்கு பேருக்கு இந்தக் காப்பீடு பொருந்தும்.
தீபாவளி வந்துவிட்டாலே பட்டாசு சத்தம் காதை பிளக்கும். பிள்ளைகளும் சொன்னபடி கேட்க மாட்டார்கள். பட்டாசு வெடித்து வீண் வம்பை வாங்குவார்கள். விபத்துகள் ஏற்படலாம்.
இந்த விபத்துகளில் இருந்து எவ்வாறு தப்பிப்பது, எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, பாலிசி என்ன, நிதி ஆதாரம் எப்படி கிடைக்கும் என்று பார்க்கலாம். தீபாவளிக்கு என்றே போன்பே சிறப்பு இன்சூரன்ஸ் திட்டத்தை பத்து நாட்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ''போன்பே கிராக்கர்ஸ் இன்சூரன்ஸ் திட்டம்'' என்று பெயர் வைத்துள்ளது. வெறும் ரூ. 9 செலுத்தி பத்து நாட்களுக்கு 25,000 கவரேஜில் இன்சூரன்ஸ் எடுக்கலாம். பட்டாசு வெடி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அல்லது பட்டாசு வெடி விபத்தில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு இறந்தால் இந்த தொகை கிடைக்கும். கடந்த அக்டோபர் 25ஆம் தேதியில் இருந்து பாலிசி பிரீமியம் தொகையான ரூ. 9 செலுத்தலாம் என்று போன்பே அறிவித்துள்ளது.
undefined
இது ஒரு மிகவும் குறுகிய கால காப்பீடாகும். பாலிசிதாரர், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு குடும்ப உறுப்பினர்கள் இந்த பாலிசியில் அடங்குவார்கள். இந்தத் திட்டம் PhonePe ஆப்ஸ் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 25, 2024 முதல் உடனடி கவரேஜ் வழங்கப்படுகிறது. இந்தத் தேதிக்குப் பின்னர் வாங்கினால், பாலிசி வாங்கிய தேதியிலிருந்து பத்து நாட்களுக்கு பொருந்தும்.
“பண்டிகைக் காலத்தில் PhonePe- வின் பட்டாசு இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கவரேஜ் குடும்பங்களுக்கு முக்கியமான, அத்தியாவசிய பாதுகாப்பை வழங்குகிறது. குடும்பத்தினர் தீபாவளியை எந்த பயமும், மனக் கவலையும் இல்லாமல், எதிர்பாராத நிதி நெருக்கடிகள் இல்லாமல் கொண்டாட முடியும் என்பதை உறுதி செய்கிறது” என்று PhonePe இன்சூரன்ஸ் ப்ரோக்கிங் சர்வீசஸின் தலைமை நிர்வாகி விஷால் குப்தா தெரிவித்துள்ளார்.
தீபாவளியின் போது நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதால் காயங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுவது சகஜம். இதற்கு தீர்வு காணும் வகையில் PhonePe இந்த ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. ஃபோன்பே ஆப்பில், பயனர்கள் இன்சூரன்ஸ் பிரிவிற்குச் சென்று, பட்டாசு இன்சூரன்ஸ் தேர்வு செய்ய வேண்டும். திட்ட விவரங்களை மதிப்பாய்வு செய்து, கட்டணத்தை செலுத்துவதன் மூலம் ஒரு நிமிடத்திற்குள் திட்டத்தில் சேரலாம்.
எவ்வாறு சேர வேண்டும்:
PhonePe ஆப்பில் இருக்கும் இன்சூரன்ஸ் பிரிவுக்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் இருந்து Firecracker Insurance-ஐ தேர்வு செய்யவும்.
திட்டப் பலன்களுடன் ரூ. 25,000 இன்சூரன்ஸ் தொகை மற்றும் ரூ. 9 பிரீமியம் உட்பட திட்ட விவரங்களைப் பார்க்கவும்.
காப்பீட்டாளரின் தகவலை மதிப்பாய்வு செய்து, திட்டப் பலன்களின் விவரங்களைப் பெறவும்.
பாலிசிதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, ''பணம் செலுத்துவதற்குத் தொடரவும்'' என்பதை கிளிக் செய்யவும்.