மாதம் வெறும் ரூ. 210 முதலீடு; முதுமையில் மாதம் ரூ. 25,000 ஓய்வூதியம்; எப்படி விண்ணப்பிப்பது?

By Dhanalakshmi G  |  First Published Oct 28, 2024, 8:30 AM IST

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சிறிய முதலீட்டில் மாதம் ரூ.5000 வரை ஓய்வூதியம் பெறலாம். 18 - 40 வயதுக்குட்பட்டவர்கள் இத்திட்டத்தில் இணைந்து அரசின் உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியத்தைப் பெற்று பயனடையலாம்.


ஒவ்வொருவருக்கும் முதுமை என்பது உடல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சவாலாக அமைந்து விடுகிறது. பணம் இருந்தால்தான் பத்தும் நடக்கும் என்று கூறப்படுவது உண்டு. பணமா இருந்தால் தான் சமூகத்தில் மரியாதையும் கிடைக்கும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

உங்கள் முதுமையிலும் யாரையும் எதிர்பார்த்து காத்து இருக்காமல், உங்கள் கையை மட்டுமே நம்பி இருக்க வேண்டுமா? இதோ நாங்கள் கூறும் யோசனையை, ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். முதுமையில் உங்களுக்கு கைகொடுக்கும் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் குறித்து பார்க்கலாம். இது சிறந்த தேர்வாகவும் இருக்கும். ம்ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் நிலையான ஓய்வூதியத்தைப் பெறலாம்.

Tap to resize

Latest Videos

undefined

இந்தத் திட்டத்தின் சிறப்பே முதலீடு செய்ய அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் அன்றாட உங்களது வீட்டுக்கு ஆகும் செலவையே ஒரு சேமிப்பாக செய்யலாம். இப்படி செய்தாலே, ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். இது உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் மற்றும் உங்களை நிதி ரீதியாக சுதந்திரமாக, கவுரவமாக வைத்திருக்கும். 

அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்வதன் மூலம், அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு பென்ஷனுக்கான உத்திரவாதமும் கிடைத்து விடுகிறது. இது ஒரு ஓய்வூதியத் திட்டமாகும்.  ஓய்வூதியத்திற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தில் தினமும் சிறிய தொகையை முதலீடு செய்வதால், ஒவ்வொரு மாதமும் ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம்.

எப்படி முதலீடு செய்வது?
அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்ய, உங்களது வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட முறையான வங்கிக் கணக்கு உங்களிடம் இருக்க வேண்டும். கூடுதலாக, உங்களிடம் மொபைல் எண்ணும் இருக்க வேண்டும்.

ஓய்வூதிய பலன்கள்:
அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்வதால், நீங்கள் வரி விலக்கு பெறலாம். இந்த வரிச் சலுகை வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. இதுவும் முதியோருக்கான சலுகையின் கீழ் வரும். இது தவிர, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வுக்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் நிலையான ஓய்வூதியம் உங்களுக்கு கிடைக்கிறது என்ற உத்தரவாதத்தையும் பெறுகிறீர்கள். 

 மனைவி, நியமன நன்மைகள்.

உங்கள் மனைவியும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், நீங்கள் இருவரும் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் மொத்தம் ரூ. 10,000 வரை ஓய்வூதியம் பெறலாம். உங்கள் மனைவி முன்னதாக இறந்துவிட்டால், கணவருக்கு முழு ஓய்வூதியம் கிடைக்கும். நீங்களும் உங்கள் மனைவியும் இறந்துவிட்டால், நீங்கள் நியமனம் செய்து இருக்கும், அதாவது நாமினி முழுத் தொகையையும் பெற தகுதியாகிறார். 

18 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஒவ்வொரு மாதமும் ரூ. 210 மட்டுமே முதலீடு செய்தால், 60 வயதில் ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000 ஓய்வூதியம் பெறலாம். குறைந்த ஓய்வூதியம் விரும்பினால், நீங்கள் குறைவாக முதலீடு செய்ய வேண்டும்.

அடல் பென்ஷன் யோஜனா:
அடல் பென்ஷன் யோஜனா மிகவும் பிரபலமான திட்டமாகும். இந்தத் திட்டத்தில் இதுவரை ஏழு கோடிக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். இதில் இருந்தே இந்தத் திட்டத்தின் சிறப்பை அறியலாம்.

அடல் பென்ஷன் யோஜனா உங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தத் திட்டத்தில் குறைந்த முதலீட்டில் பெரிய பலன்களைப் பெறலாம். உங்கள் முதுமையை நிதி ரீதியாக வலுவாக மாற்ற விரும்பினால், அடல் பென்ஷன் யோஜனா உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இப்போதே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

click me!