டெர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன? குடும்பத்திற்கு எவ்வாறு நிதி பாதுகாப்பு வழங்குகிறது?

By Dhanalakshmi GFirst Published Oct 28, 2024, 10:01 AM IST
Highlights

டெர்ம் இன்சூரன்ஸ் ஒரு வகை ஆயுள் காப்பீடு ஆகும். இது குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் எதிர்காலத்திற்கான சிறப்பான திட்டமாக இருக்கும். இளம் வயதிலேயே டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது பிரீமியத்தைக் குறைக்கும்.

டெர்ம் இன்சூரன்ஸ்: இது ஒரு வகை ஆயுள் காப்பீடு. ஒருவர் தனது 99 வயது வரை இந்த பாலிசி எடுக்கலாம். இந்த காலகட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்துவிட்டால், நியமனம் அதாவது நாமினிக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இது குடும்பத்தை பொருளாதார பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும். 

முக்கிய அம்சங்கள்:
இந்தக் காப்பீடு 10, 20, 30 ஆண்டுகளுக்கு என ஒரு நிலையான காலத்திற்கானது.
ஆயுள் காப்பீட்டை விட டெர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியங்கள் குறைவானது.  தேவைக்கேற்ப செலுத்தும் பிரிமியம் தொகையையும் கால அளவையும் தேர்வு செய்யலாம். 

Latest Videos

பலன்கள் என்ன?: 
காப்பீடு செய்தவர் திடீரென மரணித்தால், காப்பீடு குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பை நிறைவு செய்கிறது.டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்கள் புரிந்துகொள்வது மற்றும் நிர்வகிப்பது எளிதானது.

குறைபாடுகள் என்ன?: 
காப்பீடு செய்தவர் உயிர் பிழைத்தால் பிரீமியத்தைத் திரும்பப் பெற முடியாது. இறந்த பிறகுதான் பலன் கிடைக்கும். அதாவது அவர் நியமனம் செய்த குடும்ப உறுப்பினருக்கு சென்று சேரும். 

குறைந்த பிரிமியத்தில் சிறு வயதிலேயே டெர்ம் இன்சூரன்ஸ் பெறலாம்:
வயது அதிகரிக்கும் போது, ​​உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம் மற்றும் பிரீமியம் செலவுகளும் அதிகமாக இருக்கும். எனவே, உங்களது இளமை காலத்திலேயே டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது பிரீமியத்தைக் குறைக்கும். எனவே, பணியில் சேர்ந்தவுடன் டெர்ம்  இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.

குடும்பப் பாதுகாப்பு: 
குடும்பத்தில் நீங்கள்தான் முக்கிய நபர். உங்களை நம்பிதான் குடும்பம் இருக்கிறது என்கிறபட்சத்தில், முன்கூட்டியே டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்கலாம். உங்களுக்குப் பின்னர் குடும்பம் எந்தவித நிதிப் பிரச்சனையும் இல்லாமல், நிதி நெருக்கடியை எதிர்கொள்ளாமல் இருப்பதை இது உறுதி செய்கிறது.

ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்: 
நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், நிறுவனங்கள் உங்களுக்கு சிறந்த கட்டணத்தில் காப்பீட்டை வழங்கும். வயதுக்கு ஏற்ப ஆபத்தும் அதிகரிக்கிறது.

சேமிப்புப் பழக்கம்:

டெர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கவும்  உதவுகிறது. எதிர்காலத்திற்கான சிறப்பான  திட்டமாக இருக்கும். 

பிரீமியம்: 
நீங்கள் டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும்போது, ​​உங்கள் பிரீமியம் தொகை உறுதி செய்யப்படும். எதிர்காலத்தில் பிரீமியம் தொகை எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிகரிக்காது. இதுவும் டெர்ம் இன்சூரன்சில் இருக்கும் மிகப்பெரிய சலுகை.

உங்கள் நிதித் தேவைகளை மனதில் வைத்து பிரீமியம் தேர்ந்தெடுக்கவும்.
குழந்தைகளின் கல்வி முதல் வீட்டுக் கடன் வரை எவ்வளவு காலம் கவரேஜ் தேவைப்படுகிறது என்பதை கணக்கிடவும். 
பிரிமியத்தில் 80% பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
காப்பீட்டுக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படியுங்கள்.
நிறுவனத்தின் நற்பெயர், நிதி நிலைத்தன்மை மற்றும் உரிமைகோரல் ஆகியவற்றை சரிபார்க்கவும்.

யாருக்கு டெர்ம் இன்சூரன்ஸ் கிடைக்காது:
போதையில் வாகனம் ஓட்டும்போது மரணம் ஏற்படுதல் 
தற்கொலை செய்து கொள்வது 
போதைப்பொருள் அல்லது தனக்குத் தானே காயம் ஏற்படுத்தி கொண்டு மரணித்தல் 
கிரைம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மரணித்தல் 
இயற்கை பேரழிவால் இறந்தால் 
கலவரம், போர், வன்முறை போன்றவற்றால் இறந்தால் 
டிரக்கிங் சென்று மரணித்தல், ஸ்கூபா டைவிங், ஆட்டோ ரேஸ் ஆகியவற்றில் பங்கேற்று மரணித்தால் இந்த இன்சூரன்ஸ் பொருந்தாது.

பிரீமியம் தொகை கணக்கீடு:
ஒரு பெண் தனது 30 வயதில் 25 லட்சத்திற்கு பிரீமியம் எடுத்தால் ஆண்டுக்கு 269 செலுத்த வேண்டியது இருக்கும் 
ஒரு ஆண் தனது 30 வயதில் 25 லட்சத்திற்கு பிரீமியம் எடுத்தால் ஆண்டுக்கு ரூ. 279 செலுத்த வேண்டியது இருக்கும் 
ஒரு பெண் தனது 40 வயதில் 25 லட்சத்திற்கு பிரீமியம் எடுத்தால், மாதம் ரூ. 359ம், ஒரு ஆண் தனது 40 வயதில் பிரீமியம் எடுத்தால் மாதம் ரூ. 413ம் செலுத்த வேண்டியது இருக்கும்.
இதுவே 50 லட்சத்திற்கான பிரீமியம் என்றால் ஒரு பெண் மாதம் ரூ. 385, ஒரு ஆண் ரூ. 412 செலுத்த வேண்டியது இருக்கும் 
இதுவே ஒரு கோடிக்கு எடுத்தால் ஒரு பெண் தனது 30 வயதில் பிரீமியம் எடுத்தால், மாதம் ரூ. 529, ஒரு ஆண் 579 செலுத்த வேண்டியது இருக்கும்.

click me!