morth: fuel: வருகிறது கார், வேன், லாரிகளுக்கான புதிய தரவரிசை: 2023 ஏப்ரலில் அறிமுகம்: விவரம் என்ன?

By Pothy Raj  |  First Published Jul 7, 2022, 11:06 AM IST

நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் நோக்கில், எரிபொருளை மிச்சப்படுத்தி ஓடும் வாகனங்களை அதிகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு, எரிபொருள் நுகர்வு அடிப்படையிலான வாகனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளது.


நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் நோக்கில், எரிபொருளை மிச்சப்படுத்தி ஓடும் வாகனங்களை அதிகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு, எரிபொருள் நுகர்வு அடிப்படையிலான வாகனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட உள்ளது.

மோடி எபெக்ட்: மேக் இன் இந்தியா திட்டத்தால் பொம்மை ஏற்றுமதி 61% அதிகரிப்பு: இறக்குமதி 70% குறைந்தது

Tap to resize

Latest Videos

இதன்படி, இலகுரகம், நடுத்தரம் மற்றும் கனரக வாகனங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு பெட்ரோல், டீசலை நுகர்ந்து சாலையில் ஓடுகின்றன, எவ்வளவு சிக்கனமாக எரிபொருளை செலிவிடுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசைப் பட்டியல் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலாகும் எனத் தெரிகிறது.

ஸ்பைஸ்ஜெட்டுக்கு கட்டம் சரியில்ல! பங்குமதிப்பு 7% வீழ்ச்சி:52 வாரங்களில் இல்லாத சரிவு

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 115ஜியில் திருத்தம் செய்யப்பட்டு, வாகனங்களுக்கான எரிபொருள் அடிப்படையிலான தரச்சான்று வழங்கப்பட உள்ளது. இலகுரக வாகனங்கள், நடுத்தர வாகனங்கள், கனரக வாகனங்கள் நுகரும் எரிபொருள் அடிப்படையில் தரச்சான்று வழங்கப்படும். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், தயாரிக்கப்படும் வாகனங்களுக்கும் இந்த சான்று வழங்கப்படும். 

ஜூன் மாதத்தில் வேலையின்மை 7.8% அதிகரிப்பு: 1.30 கோடி பேருக்கு வேலை காலி

பயணிகளை ஏற்றுச்செல்லும் 8 சீட்கள் கொண்ட வாகனங்கள், 3.5டன் வரை சுமைதூக்கும் வாகனங்கள் ஆகியவற்றுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இந்த திருத்தம் கொண்டுவருவதன் நோக்கமே எரிபொருளை மிச்சப்படுத்தி சாலையில் ஓடும் வாகனங்களை அதிகப்படுத்த வேண்டும், சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தரச்சான்று கொண்டுவரப்படுகிறது.

இந்த அறிவிக்கை 2023, ஏப்ரல் 1ம் தேதிவரை பொருந்தும். இந்த அறிவிக்கை வெளியான 30 நாட்களுக்குள் கருத்துக்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் தெரிவிக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!