மருத்துவத்துக்கான செலவு அதிகரிக்கும்போது, அவசரத் தேவைக்கு பணம் இருப்பு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் கைகொடுப்பது மருத்துவக் காப்பீடு திட்டம்தான். தனிநபர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அவசரக்கால மருத்துவச் செலவுக்கு மருத்துவக் காப்பீடு அவசியம்.
மருத்துவத்துக்கான செலவு அதிகரிக்கும்போது, அவசரத் தேவைக்கு பணம் இருப்பு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் கைகொடுப்பது மருத்துவக் காப்பீடு திட்டம்தான். தனிநபர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அவசரக்கால மருத்துவச் செலவுக்கு மருத்துவக் காப்பீடு அவசியம்.
மோடி எபெக்ட்: மேக் இன் இந்தியா திட்டத்தால் பொம்மை ஏற்றுமதி 61% அதிகரிப்பு: இறக்குமதி 70% குறைந்தது
மருத்துவக் காப்பீடு இருந்தால், மருத்துவக் கட்டணம், மருத்துவமனைச் செலவு, மருத்துவதமனைக்கு முந்தைய செலவு, மருத்துவத்துக்குப்பிந்தய செலவு ஆகியவற்றை சமாளிக்க முடியும்
மருத்துவக் காப்பீட்டை தேர்வு செய்யும்முன், அதன் திட்டங்கள், பலன்கள், அம்சங்கள் ஆகியவற்றை நன்கு அறிதல் வேண்டும். 2022ம் ஆண்டின் சிறந்த மருத்துவக் காப்பீடுதிட்டங்கள் வெளியாகியுள்ளன அவை குறித்துதப் பார்க்கலாம்
ஆதித்யா பிர்லா ஆக்டிவ் ஹெல்த் பிளாட்டினம் ப்ளான்
ஆத்தியா பிர்லாவின் ஆக்டிவ் ஹெல்த் பிளாட்டினம் திட்டம், ரூ.2 லட்சம் முதல் ரூ.2 கோடிவரை மருத்துவச் செலவுகளை கவனிக்கிறது. இந்தத் திட்டத்தில் இந்தியாவில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறந்த மருத்துவமனைகள் உள்ளன. முழுமையாகதிட்டம் வேண்டும் என நினைக்கும் தனிநபர்களுக்கு இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் சிறந்தது.
அம்சங்கள்
60 நாட்களுக்கு முன்பும், மருத்துவமனையிலிருந்து வந்தபின் 180 நாட்களுக்குமான செலவை கவர் செய்கிறது. நீரிழிவு, ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை பாலிசியின் முதல்நாளில் இருந்து கவராகும். மருத்துவமனை பரிசோதனை, ஆலோசனை, மருத்து ஆகியவற்றுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். உடல்நலக்குறைவு, உடல்எடைக்குறைப்பு, வீ்ட்டிலிருந்தே சிகிச்சை பெறுதலுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
ஸ்பைஸ்ஜெட்டுக்கு கட்டம் சரியில்ல! பங்குமதிப்பு 7% வீழ்ச்சி:52 வாரங்களில் இல்லாத சரிவு
2. ஸ்டார் ஹெல்த் சீனியர் சிட்டிஸன் ரெட் கார்பெட் ஹெல்த் பாலிசி
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் முதியோர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக இந்த காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இதன்படி, இந்தத் திட்டம் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.25லட்சம் வரை காப்பீடுதாருக்கு பொருந்தும். 12ஆயிரம் மருத்துவமனைகள் வரை இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.
அம்சங்கள்:
இந்தத் திட்டத்தின் கீழ் உடல் பரிசோதனை, அறுவைசிகிச்சை, நவீன சிகிச்சை, ரோபோ சர்ஜரி, உள்ளிட்ட நவீன சிகி்ச்சைகளும் செய்யலாம். காப்பீட்டுக்கு முந்தைய பரிசோதனை தேவையில்லை. ரூ.25 லட்சம்வரை கவரேஜ் கிடைக்கும்
3. ஐசிஐசிஐ லாம்பார்ட் கம்ப்ளீட் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி
ஐசிஐசிஐவங்கி சார்பில் வழங்கப்படும் இந்த மருத்துவக் காப்பீட்டில் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை காப்பீடு எடுக்கலாம். 6500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் தொடர்பு உள்ளது. தனிநபர்களுக்கும், குடும்பத்தினருக்கும், பல்வேறு திட்டங்களுடன் இருப்பதால் ஏற்ற காப்பீடாகும்.
அம்சங்கள்
காப்பீடு எடுப்பதற்கு முன் இருக்கும் நோய்க்கும் இந்த காப்பீடு பொருந்தும். 45 வயது வரை காப்பீடு எடுக்கும்முன் மருத்துவப்பரிசோதனை தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டு குடும்பத்தினர் அனைவருக்கும் முழுமையான உடல்பரிசோதனை செய்ய அனுமதி
ஸ்பைஸ்ஜெட்டுக்கு சிக்கல்: டிஜிசிஏ நோட்டீஸ்: 2 மாதத்தில் 7-வது பாதுகாப்பு குறைபாடு சம்பவம்
ஸ்டார் பேமலி ஹெல்த் ஆப்டிமா
ஸ்டார் நிறுவனம் வழங்கும் இந்த மருத்துவக்காப்பீட்டில் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை காப்பீடு எடுக்கலாம். 12ஆயிரம் மருத்துவமனைகள் வரை இதில் இணைந்துள்ளன. குடும்பத்தினர் அனைவரும் குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு கிடைக்கும்.
அம்சங்கள்
ரூ5 லட்சம் வரை காப்பீடு எடுத்தால் 25 சதவீதம் காப்பீடு எடுத்த தொகைக்கு காப்பீடு செய்யப்டும். அதாவது காப்பீடு தாரர் ஏதேனும் விபத்தை எதிர்கொண்டால், இதில் சிகிச்சை செலவு சேர்க்கப்படும். பாலிசிதாரர்கள் காப்பீட்டை புதுப்பிக்க மறந்தால், 120 நாட்கள் வரை கருணைக்காலம்புதுப்பிக்க வழங்கப்படும்.
பண்டமாற்றுக்கு மாறிய சீனா: பூண்டுக்கு ஒரு வீடு; தர்பூசணிக்கு ஒரு வீடு
மருத்துவமனைச் செலவு, மருத்துவமனை அறைக் கட்டணம், மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் காப்பீட்டில் வரும். அவசரகாலத்தில் ஆம்புலன்ஸ், ஏர் ஆம்புலன்ஸில் செல்லும் செலவுக்காக 10 சதவீதத்தொகைஉறுதி செய்யப்படும். மருத்துவமனைக்கு முந்தைய 60 நாள் செலவு, மருத்துவமனையில் இருந்து வந்தபின் 90 நாட்கள் செலவும் காப்பீட்டில் பொருந்தும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் வரை காப்பீடு பெறலாம்.
ஹெச்டிஎப்சி எர்கோ ஹெல்த் சுரக்ஸா
ஹெச்டிஎப்சி வங்கி வழங்கும் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. 13 ஆயிரம் மருத்துவமனைகள் இதில் இணைந்துள்ளன. எந்தவிதமான வயது பதிவு இல்லாமல் குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்குகிறது.
ஜூன் மாத்தில் வேலையின்மை 7.8% அதிகரிப்பு: 1.30 கோடிபேருக்கு வேலை காலி
அம்சங்கள்
தினசரி மருத்துவம், ஆயுஷ் மருத்துவம், உறுப்பு தானச் செலவு ஆகியவற்றையும் காப்பீடு வழங்குகிறது. பேருகாலச் செலவு, ஏர் ஆம்புலன்ஸ் செலவும் காப்பீடு வழங்குகிறது. மருத்துவமனைக்கு முந்தைய 60 நாள் செலவு, மருத்துவமனையில் இருந்து வந்தபின் 90 நாட்கள் செலவும் காப்பீட்டில் பொருந்தும்.