2021-22ம் ஆண்டுக்கான பிஎப் கணக்கிற்கான வட்டி 2022, ஜூலை 15ம் தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
2021-22ம் ஆண்டுக்கான பிஎப் கணக்கிற்கான வட்டி 2022, ஜூலை 15ம் தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஸ்பைஸ்ஜெட்டுக்கு கட்டம் சரியில்ல! பங்குமதிப்பு 7% வீழ்ச்சி:52 வாரங்களில் இல்லாத சரிவு
2021ம் நிதியாண்டுக்கான பிஎப் வட்டி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது. தனியார் சேனல் வெளியிட்ட தகவலின்படி, 2021-22ம் ஆண்டுக்கான பிஎப் வட்டி ஜூலை மாதம் 15ம் தேதிக்குள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.
7 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட பிஎப் கணக்கிற்கான வட்டி 8.50 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மத்திய அரசு பிஎப்வட்டியை 8.10 சதவீதமாகக் குறைத்துவிட்டது. இந்நிலையில் வரும் 15ம் தேதிக்குள் வட்டிவீதம் கணக்கில் சேர்க்கப்பட்டால் எவ்வாறு தெரிந்து கொள்வது எனப் பார்க்கலாம்.
ஜூன் மாத்தில் வேலையின்மை 7.8% அதிகரிப்பு: 1.30 கோடிபேருக்கு வேலை காலி
பிஎப் வட்டியை எவ்வாறு தெரிந்து கொள்வது
எஸ்எம்எஸ் மூலம் பிஎப் பேலன்ஸ் அறியலாம்
பிஎப் உறுப்பினர்கள் அனைவருக்கும் யுஏஎன்(UAN) வழங்கப்பட்டிருக்கும், அதை பிஎப் போர்டலிலும் பதிவு செய்திருப்பார்கள். ஆதலால், 7738299899 என்ற எண்ணுக்கு, EPFOHO UAN ENG என டைப் செய்து பேலன்ஸ் அறியலாம்
2. மிஸ்டு கால் மூலம் பேலன்ஸ் அறியலாம்
பதிவு செய்த பிஎப் உறுப்பினர்கள் 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் அளித்து அதன் மூலம் எஸ்எம்எஸ் வழியாக பிஎப் பேலன்ஸை அறியலாம்.
3. UMANG ஆப்ஸ் மூலம் பேலன்ஸ் அறியலாம்
UMANG செயலி வைத்திருக்கும் பதிவு செய்த உறுப்பினர்கள், பிஎப் பாஸ்புக்கை பெற்று, பேலன்ஸ் அறியலாம்.
ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? புதிதாக பின் நம்பர் உருவாக்க பல வழிகள்
4. பிஎப் இணையதளம் மூலம் அறியலாம்