spicejet: ஸ்பைஸ்ஜெட்டுக்கு சிக்கல்: டிஜிசிஏ நோட்டீஸ்: 2 மாதத்தில் 7-வது பாதுகாப்பு குறைபாடு சம்பவம்

By Pothy Raj  |  First Published Jul 6, 2022, 2:25 PM IST

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர்ந்து இரு நாட்களாக இரு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவங்களில் சிக்கியதையடுத்து, விளக்கம் அளிக்கக் கோரி விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அளித்துள்ளது


ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர்ந்து இரு நாட்களாக இரு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவங்களில் சிக்கியதையடுத்து, விளக்கம் அளிக்கக் கோரி விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அளித்துள்ளது

ஜூன் மாத்தில் வேலையின்மை 7.8% அதிகரிப்பு: 1.30 கோடிபேருக்கு வேலை காலி

Tap to resize

Latest Videos

கடந்த 2 மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் 7-வது முறையாக சிக்கியுள்ளது. அதிலும் நேற்றும், இன்றும் அடுத்தடுத்து இரு சம்பவங்கள் நடந்துள்ளன.

பயணிகள் பாதுகாப்பில் அஜாக்ரதையாக நடந்ததையடுத்து, பாதுகாப்பான விமானநிறுவனமாக, நம்பகத்தன்மையான நிறுவனமாக நடந்து கொள்ளத் தவறிவிட்டீர்கள் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குரகம் தெரிவித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் டெல்லியிலிருந்து துபாய்க்கு நேற்று சென்றது. ஆனால், திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாகத் தரையிறங்கியது. ஆனால் விசாரணையில் விமானத்தின் எரிபொருள் டேங்கரில் லேசான கசிவு இருந்துள்ளது. ஆனால், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்தெரிவித்தது.

ஏடிஎம் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? புதிதாக பின் நம்பர் உருவாக்க பல வழிகள்

மற்றொரு சம்பவமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் க்யூ400 டர்போபிராப் விமானம் குஜராத்தின் கான்ட்லாவிலிருந்து மும்பைக்கு சென்றது. அப்போது வின்ட்ஷீல்ட் பகுதியில் பறக்கும்போது நடுவானில் கீறல் ஏற்பட்டது. தரையிலிருந்து 23ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்தபோது வின்ட்ஷீல்ட் பகுதியில் பிளவு ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்தது.

இதனிடையே இன்று காலை கொல்கத்தாவிலிருந்து ஸ்பைஸ்ஜெட்நிறுவனத்தில் சரக்கு விமானம் சீனாவுக்குப் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களில் வானிலை காரணமாக விமானம் மீண்டும் தரையிறங்கியது.

கடந்த 18 நாட்களில் நடந்த 7-வது சம்பவம் இதுவாகும். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதவை. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானப் பராமரிப்பு, பயணிகள் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்து,  விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது.

பண்டமாற்றுக்கு மாறிய சீனா: பூண்டுக்கு ஒரு வீடு; தர்பூசணிக்கு ஒரு வீடு

இந்நிலையில் கடந்த 2 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 2 விமானங்கள் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கியதையடுத்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஸ்பைஸ்ஜெய் நிறுவனம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2020ம் ஆண்டிலிருந்து இன்டிகோநிறுவனம் மட்டுமே லாபத்தில் இயங்குகிறது. ரஷ்யா உக்ரைன் போருக்குப்பின் விமான எரிபொருள் விலை உயர்வால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 

ஸ்பைஸ்ஜெட் விமானம் அடுத்தடுத்து பாதுகாப்பு குறைபாடு சம்பவங்களில் சிக்கியதையடுத்து, அந்தநிறுவனத்தின் பங்கு மதிப்பு 7 சதவீதம் சரிந்துள்ளது.

click me!