Paytm Lite : இனி ஐபோன் பயனர்கள் UPI PIN இல்லாமல் பணம் செலுத்தலாம்.. எப்படி தெரியுமா?

By Ramya sFirst Published May 11, 2023, 1:25 PM IST
Highlights

பேடிஎம் (Paytm) நிறுவனம் iOS இயங்குதளங்களுக்கு Paytm UPI Lite சேவையை வழங்கியுள்ளது.

UPI Lite அம்சம் மூலம், ஐபோன் பயனர்கள் UPI பின்னை உள்ளிடாமல் பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். iOSக்கான UPI Lite ஆதரவுடன், Paytm ஆனது UPI இல் RuPay கிரெடிட் கார்டு, ஸ்பிளிட் பில் மற்றும் மொபை எண்களை மறைக்கும் UPI ஐடி போன்ற புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது. 

UPI Lite என்றால் என்ன?

UPI Lite என்பது யுபிஐ கட்டண முறையின் எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பாகும். இது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தியது. சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை எளிதாகவும் வேகமாகவும் செய்யும் வகையில் UPI Lite வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது மளிகை பொருட்கள் வாங்குவது அல்லது குறைந்த விலை கொண்ட பொருட்களுக்கான தொகை போன்றவற்றை UPI Lite மூலம் எளிதில் செலுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : உலகின் பணக்கார அரச குடும்பம் எது தெரியுமா? கண்டிப்பா இங்கிலாந்து அரச குடும்பம் இல்லை..

UPI Lite ஆனது ஸ்மார்ட்போனில் உள்ள வாலட்டில் உருவாக்குவதன் மூலம் செயல்படுகிறது. அந்த வாலட்டில் ரூ.2000 வரை சேமிக்க முடியும். இருப்பினும், Paytm தனது பயன்பாட்டில் UPI லைட்டை அறிமுகப்படுத்திய முதல் பேமெண்ட் வங்கியாகும். இப்போது, iOS இயங்குதளங்களுக்கு UPI Lite அம்சத்தை கொண்டு வந்துள்ளது. UPI Lite-ஐ அமைத்தவுடன், எந்தத் தொந்தரவும் இல்லாமல் உடனடி மற்றும் பாதுகாப்பான பணப் பரிமாற்றங்களை ரூ.200 வரை மேற்கொள்ள பயனருக்கு உதவுகிறது. ஒரு பயனர் ஒரு நாளைக்கு இரண்டு முறை UPI லைட்டில் ரூ.2,000 வரை சேர்க்கலாம், அதாவது மொத்த தினசரி உபயோகம் ரூ.4,000 வரை இருக்கலாம்.

ஐபோனில் பேடிஎம் UPI லைட்டை எவ்வாறு பயன்படுத்துவது?

UPI Lite-ஐ பயன்படுத்த, பயனர்கள் தங்கள் Paytm வாலட்டில் பணத்தைச் சேர்த்து, பின்னர் தாங்கள் செலுத்த விரும்பும் வணிகரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பரிவர்த்தனை உடனடியாகவும் பின் தேவையில்லாமல் செயல்படுத்தப்படும்.

Paytm UPI Lite மூலம் பரிவர்த்தனைகளைத் தொடங்குவதற்கான படிப்படியான வழிகாட்டி இதோ

  • Paytm செயலியை திறக்கவும்.
  • முகப்பு திரையில் உள்ள "UPI Lite" ஐகானை கிளிக் செய்யவும்.
  • உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
  • உங்கள் UPI லைட் வாலட்டில் பணத்தைச் சேர்க்கவும்.
  • பணம் செலுத்த, " UPI Lite " விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பெறுநரின் UPI ஐடியை உள்ளிடவும் அல்லது அவர்களின் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
  • நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை உள்ளிடவும்.
  • " Pay " என்பதை கிளிக் செய்யவும்.

UPI Liteஐ பயன்படுத்தும் போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் :

  • உங்கள் UPI லைட் வாலட்டில் நீங்கள் சேர்க்கக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ. 2,000.
  • UPI Lite-ஐ  பயன்படுத்தி நீங்கள் செலுத்தக்கூடிய அதிகபட்சத் தொகை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 200.
  • UPI Lite-ஐ பயன்படுத்தி ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.
  • இந்த அம்சத்தை ஆதரிக்கும் வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே UPI லைட் கிடைக்கும்.

Paytm UPI Liteக்கு 3-நிலை வங்கி தர பாதுகாப்பை வழங்குகிறது என்று Paytm குறிப்பிடுகிறது. வங்கி பாஸ்புக்கில் தனிப்பட்ட பேமெண்ட்களை காட்டாமல் வசதியையும் வழங்குகிறது. அதற்குப் பதிலாக, UPI Lite பேலன்ஸை சேர்ப்பதற்கான ஒற்றை உள்ளீட்டை மட்டுமே இது காட்டுகிறது. இது பயனருக்கு தெளிவான வங்கி அறிக்கையை வழங்குகிறது. UPI Lite ஆனது Paytm Payments Bank, ICICI வங்கி, HDFC வங்கி, SBI மற்றும் Kotak Mahindra வங்கி உட்பட 13 வங்கிகளால் ஆதரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலகின் மிகவும் பழமையான 7 மரங்கள் இவைதான்.. பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்

click me!