
பயணிகள் வாகனம் விற்பனை மொத்த விற்பனையாளரிடம் இருந்து டீலருக்குச் செல்லும் மொத்த விற்பனை ஜனவரி மாதம் 8 சதவீதம் குறைந்துள்ளது என்று இந்திய ஆட்டமொபைல் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
2022 ஜனவரியில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை 2 லட்சத்து 54 ஆயிரத்து 287 ஆக குறைந்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே ஜனவரியில் 2 லட்சத்து 76ஆயிரத்து 554 ஆக உயர்ந்திருந்தது.
கடந்த மாதம் பயணிகள் கார் விற்பனை ஒரு லட்சத்து 26ஆயிரத்து 693 விற்பனையானது, ஆனால், கடந்த 2021, ஜனவரியில் இது ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 244 ஆக உயர்ந்திருந்தது. வேன்கள் விற்பனையும் குறைந்துள்ளது, கடந்த ஜனவரியில் 10,632 விற்பனையான நிலையில், 2021, ஜனவரியில் 11,816ஆக இருந்தது.
பல்வேறு பயன்பாட்டுக்கும் பயன்படும் வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 494 ஆகஇருந்தது. இது 2022, ஜனவரியில் அதிகரித்து, ஒரு லட்சத்து 16ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள் விற்பனை 21 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் 14 லட்சத்து 29ஆயிரத்து 928ஆக இருந்தநிலையில், 2022 ஜனவரியில் 11 லட்சத்து 28ஆயிரத்து 293 ஆகக் குறைந்தது.
3 சக்கரவாகனங்கள் மொத்த விற்பனையும் குறைந்துள்ளது. கடந்த 2021 ஜனவரியில் 17 லட்சத்து 33ஆயிரத்து 276ஆக இருந்தநிலையில், 2022, ஜனவரியில் 14 லட்சத்து 6ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது.
விற்பனை குறைவுக்கு என்ன காரணம்?
இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் ராஜேஷ் மேனன் கூறுகையில் “ 2021, ஜனவரியோடு ஒப்பிடுகையில், 2022 ஜனவரியில் விற்பனை குறைந்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவல், மற்றும் செமிகன்டக்டர் பற்றாக்குறைதான் வாகன விற்பனை சரிவுக்குக் காரணம்.
இன்னும் கிராமப்புறங்களில் தேவையும், பொருளாதாரமும்இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதைத்தான் இரு சக்கர வாகனங்கள் விற்பனை மந்தமாக இருப்பதைக் காட்டுகிறது. அதேநேரம், சப்ளைபகுதியில் சந்தையில் நல்ல தேவை பயணிகள் வாகனங்களுக்கு இருந்தது. ஆனால், செமிகன்டக்டர் பிரச்சினையால்தான் விற்பனைக் குறைந்தது. 3 சக்கரவாகனங்கள் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது” எனத் தெரிவித்தார்
கடந்த மாதம் மாருதி சுஸூகி நிறுவனம் ஒரு லட்சத்து 28ஆயிரத்து 924 கார்களை விற்பனை செய்தது, ஆனால் கடந்த 2021 ஜனவரியில் ஒருலட்சத்து 39ஆயிரத்து 2 கார்களை வழங்கியிருந்தது. ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கடந்த மாதம் 44,022 கார்களை விற்பனை செய்தது, கடந்த ஆண்டு ஜனவரியில் 52,005கார்களைவிற்பனை செய்திருந்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.