Cryptocurrency :கிரிப்டோகரன்சிக்கு வரிவிதிச்சா சட்டப்பூர்வமா? மவுனம் கலைத்த நிர்மலா சீதாராமன்

Published : Feb 11, 2022, 02:06 PM ISTUpdated : Feb 11, 2022, 02:46 PM IST
Cryptocurrency :கிரிப்டோகரன்சிக்கு வரிவிதிச்சா சட்டப்பூர்வமா? மவுனம் கலைத்த நிர்மலா சீதாராமன்

சுருக்கம்

கிரிப்டோகரன்சிக்கு மத்திய அரசு 30 % வரி விதித்தால் சட்டப்பூர்வமாகிவிடுமா என்று நாடாளுமன்றத்தில்  மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

கிரிப்டோகரன்சிக்கு மத்திய அரசு 30 % வரி விதித்தால் சட்டப்பூர்வமாகிவிடுமா என்று நாடாளுமன்றத்தில்  மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததில் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாயும், டிஜிட்டல் சொத்துக்கள், கிரிப்டோகரன்சியின் மூலம் பெறப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி ஆகியவைதான். கிரிப்டோகரன்சியின் மூலம் கிடைக்கும் வருவாய் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் கரன்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் நிலையில் உலகளவில் புழக்கத்தில் இருக்கும் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எதிரியம் அல்லது என்எப்டிக்கு அங்கீகாரம் அளி்க்கப்படுமா, வரிசெலுத்தி வர்த்தகம் செய்வதால் சட்டபூர்வமானதா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இது குறித்து எந்தவிதமான விளக்கமும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படாமல் இருந்தநிலையில் நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனம் கலைத்தார். மாநிலங்களவையில் அவர் பேசியதாவது:

கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி மட்டுமே மத்திய அரசு விதித்துள்ளது. வரிவிதிக்கப்பட்டதால் கிரிப்போடகரன்சி சட்டப்பூர்வமானதுஅல்ல. அதை தடை செய்யவும் இல்லை, அதை முறைப்படுத்தவம் இல்லை. 

கிரிப்டோகரன்சியை இந்தநேரத்தில் நான் தடை செய்யவோ அல்லது அதை சட்டப்பூர்வமாக்கவோ இல்லை. எனக்கு வர வேண்டிய தகவல்கள், கிடைத்தவுடன் அதை தடை செய்யலாமா அல்லது தடை செய்யவேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்தார்

கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதாவை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. இந்த மசோதாவில்தான் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்துவது குறித்து தெரியவரும்.

கிரிப்டோகரன்சிக்கு ரிசர்வ் வங்கி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் எந்தவிதமான ரிஸ்க் எடுத்தாலும் அது அவர்களைச்சார்ந்தது. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை மட்டுமே செய்யும். கிரிப்டோகரன்சி ஒருபோதும் சொத்தாகக் கருத முடியாது. அதற்கு நிலையான மதிப்பு எப்போதும் இல்லை.  அதை துலிப் மலருக்குகூட இணையாகாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நேற்று எச்சரித்துள்ளார்.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்