
அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை இல்லாவிட்டால், அனைத்தையும் ஒரு குடும்பத்துக்காக உருவாக்கிவிட்டு காங்கிரஸ் கட்சியைப் போன்று 65 ஆண்டுகளில் வீழ்ந்துவிடுவோம் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாகப் பதில் அளித்தார்.
பட்ஜெட் உரைக்கு பதில் அளித்து மாநிலங்களவையில் இன்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
2022-23ம் ஆண்டு பட்ஜெட் என்பது, தொலைநோக்குப் பார்வை கொண்ட, 100-வது சுந்திரத்தினத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்லும் பட்ஜெட்டாக இருக்கும். இந்த பட்ஜெட்டின் நோக்கமே நிலையான மற்றும் நிலைத்தன்மையுடைய பொருளாதார மீட்சிக்கானது,டிஜிட்டல் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும், அதன்மூலம் வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தையும், சாமானிய மக்கள் எளிதாக அணுகும் வகையிலான நிர்வாகத்தை கொண்டு வருவது.
உதாரணமாக விவசாயிகளுக்கான ட்ரோன் விமானங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகளை விரைவாக வேளாண் நிலங்களில் தெளிக்கலாம், பயிர்விளைச்சலை எளிதாக அளக்கலாம், சர்வே செய்யலாம்.
எங்களின் பட்ஜெட் என்பது அடுத்த 25 ஆண்டுகளை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, இந்தியாவின் 100-வது சுதந்திரத்தினத்தை நோக்கமாகக் கொண்டது. அடுத்த 25ஆண்டுகாலப் பார்வைஇல்லாவிட்டால், நாங்களும் காங்கிரஸ் கட்சியைப் போன்று 65 ஆண்டுகளில் அனைத்தையுமே குறிப்பிட்ட குடும்பத்துக்காக செய்துவிட்டு சென்றுவிடுவோம்.
பல தருணங்களில் இதற்குமுன் பொருளதாரம் மைனஸில் சென்றிருக்கிறது. அதிலும் கொரோனா பெருந்தொற்று காலம் மிகப்பெரியது, உள்நாட்டு மொத்தஉற்பத்தி(ஜிடிபி) வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் இழந்துவிட்டோம்.
ஆனாலும், நாம் தொடர்ந்து பணவீக்கத்தை 6.2 % அளவிலேயே பராமரித்துக் கட்டுப்படுத்தி வருகிறோம். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 9.1 சதவீதம் வரை இருந்தது என்பதை மறந்துவிட்டார்களா
வேலையின்மை குறித்து எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். 60 லட்சம் பேருக்கு வேலை உருவாக்க பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ளது, உற்பத்தி அடிப்படையிலான ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த பிஎல்ஐ திட்டம், தற்போது 14 துறைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதற்காக உள்கட்டமைப்புத் துறைக்காக ரூ.7 லட்சம் கோடி செலவிடுகிறது மத்திய அரசு.
நகர்புற வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது என்பது முற்றிலும் விஸ்டா திட்டதுக்காகத்தான். ஆனால், வீ்ட்டுவசதித் திட்டத்துறை அமைச்சகத்துக்குஒதுக்கப்பட்ட நிதி விஸ்டா திட்டத்துக்கு பயன்படுத்தப்படாது. அது பிரதமர் ஆவாஸ் யோஜனாவுக்கு பயன்படும்
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.