வருகிறது ஸ்டார் ரேட்டிங்: கார்களில் 6 ஏர்பேக், 3 பாயின்ட் சீட் பெல்ட் கட்டாயம்: நிதின் கட்கரி அதிரடி

By manimegalai aFirst Published Feb 11, 2022, 12:30 PM IST
Highlights

சர்வதேச அளவில் கார்களின் பாதுகாப்புக்கு இருக்கும் ஸ்டார் ரேட்டிங் அளவைவிட, இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள், ரேட்டிங் சிறப்பாக இருக்குமாறு விதிகள் உருவாக்கப்படும், இதன் மூலம் கார் வாங்கும் மக்கள் பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொண்டு வாங்கலாம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கார்களின் பாதுகாப்புக்கு இருக்கும் ஸ்டார் ரேட்டிங் அளவைவிட, இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள், ரேட்டிங் சிறப்பாக இருக்குமாறு விதிகள் உருவாக்கப்படும், இதன் மூலம் கார் வாங்கும் மக்கள் பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொண்டு வாங்கலாம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கார்களை மட்டும் உள்ளடக்கியபாதுகாப்பு அம்சங்களாக இல்லாமல், சாலையில் நடக்கும் பாதசாரிகளின் நலன்களையும் கொண்டதாக இருக்கும் என்று நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கிரி நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவில் கார்களுக்கென தனியாக பாதுகாப்பு அம்சங்கள், ரேட்டிங் உருவாக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துக் கார்களுக்கும் இது பொருந்தும். இந்த பாதுகாப்பு அம்சங்கள், ரேட்டிங் குறித்து கார் வாங்குவோருக்குத் தெரியப்படுத்தி அதன்பின் அவர்கள் கார்களைத் தேர்வு செய்வார்கள்.இந்த பாதுகாப்பு அம்சங்கள் கார்களுக்காக மட்டுமல்லாமல் சாலையில் நடப்போரையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்படும்.

அட்வான்ஸ் எமர்ஜென்சி பிரேக், ஓட்டுநர் தூங்கினால் எச்சரிக்கும் அலாரம் உள்ளிட்டவே கார்களில் பாதுகாப்பு அம்சங்களாகக் கொண்டுவரப்படும். அதுமட்டுமல்லாமல் அனைத்து கார்களிலும் 6 ஏர் பேக் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். முன்பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஓட்டுநர் உள்பட இருவருக்கும் 3 பாயின்ட் சீட் பெல்ட் கட்டாயம் இருக்க வேண்டும்.

தற்போது 2 பாயின்ட் சீட் பெல்ட்தான் பயன்பாட்டில் இருக்கிறது, இனிமேல் ஒய்வடிவில் 3பாயினட் சீட் பெல்ட் கட்டாயமாகும். இந்த பெல்ட் இருந்தால், விபத்துகளில் உயிரிழப்பையும், காயம் ஏற்படுவதையும் குறைக்க முடியும்.  இந்த இரு அம்சங்களையும் அக்டோபர் மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போது சர்வதேச கார் பாதுகாப்பு பரிசோதனை மையம்தான் இந்திய கார்களை பரிசோதித்து சான்று, ரேட்டிங் வழங்கி வருகிறது. விரைவில் இந்தியாவுக்கான தனியாக பாதுகாப்பு ரேட்டிங், அம்சங்கள் கொண்டுவரப்படும். ஒவ்வொரு ஆண்டும் விபத்துகளில் 1.50 லட்சம் மக்கள் உயிரிழக்கிறார்கள். ஆதலால், கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் அவசியம். கார் சந்தையில் போட்டி அதிகரிக்கும்போதுதான் தரமான, அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார் கிடைக்கும். வாங்குவோருக்கும் அது பயனுள்ளதாக அமையும்
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்
 

click me!