பட்ஜெட் தாக்கல் செய்யப்போது பங்குசந்தையில் உயர்வுன் காணப்பட்ட முடியில் பிற்பகலுக்குப்பின் கடும் ஊசலாட்டம் ஏற்பட்டு முடிந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தநிலையில், நிப்டி சரிந்தது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்போது பங்குசந்தையில் உயர்வுன் காணப்பட்ட முடியில் பிற்பகலுக்குப்பின் கடும் ஊசலாட்டம் ஏற்பட்டு முடிந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்தநிலையில், நிப்டி சரிந்தது.
மத்திய பட்ஜெட்டில் மாத வருமானம் ஈட்டுவோருக்கான குறைந்தபட்ச வரிக்கழிவு அதிகப்படுத்தப்பட்டதையடுத்து, சந்தையில் 1000 புள்ளிகள் வரை உயர்வு காணப்பட்டது. ஆனால், பிற்பகுதிக்குப்பின் லாப நோக்கத்துடன் முதலீட்டாளர்கள் செயல்பட்டதால் ஏற்றத்தைத் தக்கவைக்க முடியவில்லை. இதனால் மளமள சந்தையில் பங்குகள் விலை சரிந்தன
புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு! எவ்வளவு சேமிக்கலாம்?, பழைய முறை இருக்கா?
அதானி குழுமத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்திலும் பெரிய சரிவைச் சந்தித்தன. அதானி குழும பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தன.
மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 158 புள்ளிகள் உயர்ந்து, 59,708 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 45 புள்ளிகள் சரிந்து, 17,616 புள்ளிகளில் நிலைபெற்றது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில், 14 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன, 16 நிறுவனப் பங்குகள் உயர்ந்தன.
பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு, நிப்டி ஜோர்
நிப்டியில் ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஜேஎஸ்டபிள்யு, டாடா ஸ்டீல், டாடாநுகர்வோர் பொருட்கள் ஆகிய பங்குகள் விலை உயர்ந்தன. அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எச்டிஎப்சி லைப், எஸ்பிஐ லைப், பஜாஜ் பின்சர்வ் பங்கு விலை குறைந்தன.
நிப்டியில், உலோகம், பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் 1 முதல் 5 சதவீதம் சரிந்தது. ஐடி துறைப் பங்குகள் உயர்ந்தன.
சிகரெட்டுக்கு வரிவிதிக்கப்பட்டதால் ஐடிசி பங்குகள் விலை உயர்ந்தன. ரியல்எஸ்டேட் துறைக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதால், ரியல்எஸ்டேட், கட்டுமானத்துறை பங்குகளும் உயர்ந்தன.