பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கு 79,590 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்திற்கு 79,590 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட் உரையில் இடம்பெற்றன.
undefined
அந்த வகையில் வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களின் இன்னல்களைப் போக்கும் வகையில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.79,590 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Union Budget 2023-24: விவசாய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்
இது கடந்த 2022-23 நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் 66 சதவீதம் அதிகம் ஆகும். 2022-23 நிதி ஆண்டில் 80 லட்சம் வீடுகள் கட்ட ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
நவம்பர் 2022 வரை இத்திட்டத்தின் கீழ் 1.2 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதில் 64 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சகம் கூறுகிறது.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஒப்புதல் வழங்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்தைக் கொண்டு இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது என்பது நினைவூட்டத்தக்கது.
Union Budget 2023-24: ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!