மத்திய பட்ஜெட்டில் விவசாய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கும் திட்டத்தையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் விவசாய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கும் திட்டத்தையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் இது என்றும் விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவரும் பயனளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தை பிரகாசமான ஒன்றாக உலகம் அங்கீகரித்துள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
விவசாயத்துறை பற்றி பேசிய அமைச்சர் நிர்மலா, 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவசாயிகள் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
1. விவசாயத்துக்கு கடன் வழங்க 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2. விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேளாண் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. கால்நடை, பால்வளம், மீன்வளத் துறைகளில் 20 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. தோட்டப் பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஆரோக்கியமான நடவுப் பொருட்கள் மற்றும் கருவிகள் வழங்க 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
5. மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், சிறு குறு வியாபாரிகள் பயன்படும் வகையில் மீன்வளத்துறைக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
6. சிறுதானியகள் பயிரிடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஸ்ரீ அண்ணா’ என்ற சிறுதானியங்களுக்கான உலகளாவிய மையம் உருவாக்கப்படுகிறது.
7. கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளம் ஆகியவற்றுக்கு 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
8. 'சஹகர் சே சம்ரித்தி' திட்டத்தின் கீழ் இதுவரை 63,000 வேளாண்மைக் கடன் சங்கங்களை கணினிமயமாக்கியுள்ளது. இதற்காக ரூ.2,516 கோடி முதலீடு செய்துள்ளது.
Union Budget 2023-24: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்