பட்ஜெட் பணவீக்கத்தைத்தான் அதிகப்படுத்தும்; வேலைவாய்ப்பை எப்படி உருவாக்கும்: சச்சின் பைலட் காட்டம்

By manimegalai a  |  First Published Feb 3, 2022, 11:20 AM IST

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டில் பணவீக்கத்தையும், விலை வாசி உயர்வைத்தான் அதிகப்படுத்தும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் பைலட் காட்டமாக விமர்சித்துள்ளார்.


மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டில் பணவீக்கத்தையும், விலை வாசி உயர்வைத்தான் அதிகப்படுத்தும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் பைலட் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4-வது பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு வசதிகளைஅதிகப்படுத்தும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், சாமானிய மக்களுக்கு கூடுதலாக ஒரு ரூபாய்கூட வரிவிதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

ஆனால், பட்ஜெட்டில் நடுத்தரக் குடும்பத்தினர், ஊதியம் பெறும் பிரிவினர், விவசாயிகள், இளைஞர்கள், சிறு,குறு,நடுத்தரத் தொழில்களை மத்திய அரசு மறந்துவிட்டது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் பட்ஜெட் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய அ ரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நாட்டில் விலைவாசி உயர்வை மேலும் அதிகப்படுத்தும் பணவீக்கத்தை உயர்த்தும். வேலைவாய்ப்புகளை உருவாக்காது. நாட்டில் 3 முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன, விவசாயிகள் பிரச்சினை, பணவீக்கம், வேலையின்மை இந்த மூன்றையும் தீர்க்கவில்லை.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு ஏதாவது நிவாரணம் கொடுத்திருக்க வேண்டும். நிதி அமைச்சர் அவர்களை வேதனைப்படுத்திவிட்டார்” எனச் சாடியுள்ளார்

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் மோடியின் கருத்துக்கு முற்றிலும் விரோதமாகத்தான் மத்திய பட்ஜெட் இருக்கிறது. மத்திய அரசின் தவறான கொள்கைகளின் விளைவுகளை இந்ததேசம் தாங்கிக்கொள்ள வேண்டும். பாஜகவின் கொள்கைகளால் இந்த தேசம் பெரியஅளவு பாதிக்கப்படப் போகிறது.

நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமை மோசமடைந்து வருகிறது, வேலையின்மை அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள் மிகப்பெரிய அளவில் மூடப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை, அத்தியாவசியப் பொருட்கள் விலை சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டன. 
இளைஞர்கள், நடுத்தரக் குடும்பத்தினர், ஏழைகள், விவசாயிகள் நலன்சார்ந்த பட்ஜெட் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பட்ஜெட்டில் எந்த அம்சங்களும் இல்லை. விவசாயிகளுக்கு எந்தவிதமான நலனும், திட்டங்களும் இல்லாத முதல் பட்ஜெட் இதுதான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் ஏழ்மை அதிகரித்துள்ளநிலையில் அதைத் தீர்க்க புதிதாக எந்தத் திட்டத்தையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் பற்றி மத்திய அரசு பேசுகிறது, ஆனால், இன்றைய கொள்கைகள் வலிமையாக இருந்தால்மட்டும்தான் எதிர்காலம் சிறப்பாக இருப்பதாக பார்க்க முடியும்” 
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார்

click me!