பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு 68% கூடுதல் நிதி ஒதுக்கீடு ஏன்? ஓர் பார்வை

By manimegalai a  |  First Published Feb 1, 2022, 8:21 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நடப்பு நிதியாண்டைவிட கூடுதலாக 68 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு நடப்பு நிதியாண்டைவிட கூடுதலாக 68 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெரும்பாலும் உள்கட்டமைப்பு வசதிகளையும், சாலை வசதிகளை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

நடப்பு நிதியாண்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.1,18,101 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் அதைவிட68 சதவீதம் அதிகமாக 2022-23 நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.1,99,107.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறைக்கு கூடுதலாக அடுத்த ஆண்டு ரூ.81 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.76,665 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் அடுத்த நிதியாண்டில் 133 சதவீதம் அதிகமாக ரூ.1,34,105கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ 2022-23 நிதியாண்டில் 25 ஆயிரம் கி.மீ அளவுக்கு சாலைஅமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில் 12ஆயிரம் கி.மீ தொலைவுக்கு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்

சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதார் அராமானே கூறுகையில் “ துறைமுகங்கள்இணைப்பு, உலக வங்கியின் க்ரீன்பீல்ட் திட்டம் உள்ளி்ட்ட பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து வ சதிக்கான செலவு ரூ.2,54,108 கோடியாகும். பட்ஜெட் ஒதுக்கீடு தவிர தனியார் முதலீடுகளும் வரும்போது இந்தஇலக்கு சாத்தியமாகும்.அதுமட்டுமல்லாமல் க்ரீன் பாண்ட் எனப்படும் பசுமை சாலைக்கான பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டவும் முடிவு செய்துள்ளோம். முதல்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கடந்த ஆண்டு நவம்பரில் இதேபோன்று பசுமைப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.8ஆயிரம் கோடி திரட்டியது. ” எனத் தெரிவித்தார்

மத்தியஅரசின் பட்ஜெட்திட்டங்களில் முக்கியமானது கதி சக்தி திட்டமாகும். அனைவருக்குமான வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, நிதிமுதலீடு ஆகியவற்றில் கதி சக்தி திட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.16 அமைச்சங்களை ஒருங்கிணைத்து இந்த கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கப்பல்போக்குவரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவற்றையும், மாநில அரசுகளின் திட்டமிடல், திட்டங்களை செயல்படுத்துதலும் இதில்ஒருங்கிணைக்கப்படுகிறது

கதி சக்தி திட்டத்தின் நோக்கம் என்பது உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், சரக்குப் போக்குவரத்துக்கான வசதிகள், மக்களும், சரக்குகளும் தடையின்றி எளிதாகச்செல்ல சாலை வசதி போன்றவை அமைப்பதாகும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும், மேம்பாட்டையும்வேகப்படுத்த முடியும். இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 100 சரக்குப் போக்குவரத்து முனையங்கள் உருவாக்கப்பட உள்ளன

நேஷனல் ரோப்வே டெவலப்மென்ட் ப்ரோகிராம் எனப்படும் தேசிய கம்பிவழி போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தின் அரசு,தனியார் துறைஇணைந்து முதலீடுசெய்யப்பட உள்ளது. இதன் மூலம் மலைப்பகுதிகளில் 60கி.மீவரை ரோப்கார் மூலம் போக்குவரத்து வசதிகள் பெறும்.
2022-23ம் ஆண்டில் நாக்பூர், சென்னை, பெங்களூரு, இந்தூர் ஆகிய 4 நகரங்களில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் அமைக்கவும் ஒப்பந்தம் வழங்கப்படும். மொத்தம் 35 லாஜிஸ்டிக் பார்க்அமைக்க கடந்த 2017ம் ஆண்டு அமைச்சரவை ஒப்புதல்அளித்தது குறிப்படித்தக்கது. 
 

click me!