ஏன் பிஎஸ்என்எல் தடுமாறுகிறது? தனியாருடன் ஏன் போட்டியிட முடியவில்லை? மத்திய அமைச்சர் அஸ்வினி பதில்

By manimegalai aFirst Published Feb 7, 2022, 3:47 PM IST
Highlights

அடுத்த 5 ஆண்டுகளில் மொபைல் தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்

அடுத்த 5 ஆண்டுகளில் மொபைல் தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்

மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆத்மநிர்வார் பாரத் திட்டத்தில் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு தேவையான வடிவமைப்புகள் குறித்து தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டது என்பதால், இது திருப்தி தொடர்பான விஷயம். ஆதலால், 5ஜி தொழில்நுட்பம் சிறப்பாக எதிர்பார்ப்புகளைவிட நன்றாக அமைய வேண்டும்

5ஜி கோர் மற்றும் ரேடிமொ நெட்வொர் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மற்ற நாடுகளில் இருக்கும் 4ஜி தொழில்நுட்பத்தைவிட இந்தியாவில் சிறப்பாக 4ஜி தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது, அதை வடிவமைத்தும் இருக்கிறோம்.

 டி-டாட் மற்றும் டிசிஎஸ் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை நன்கு வடிவமைத்து வருகிறார்கள். ஆதலால், அடுத்த 5 ஆண்டுகளில் மொபைல் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகளவில் முதல் நாடுகளில் ஒன்றாக மாறும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முந், மொபைல், மின்னணு சாதனங்கள்,  செயல்முறை இந்தியாவில்உருவாக்கப்படும் என்று நினைத்திருந்தோம். 

இப்போது, உலகளவில் செல்போன் தயாரிப்பில் 2-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. உலகளவில் மொபைல் தயாரிப்பில் மிகப்பெரிய சந்தையையும், கட்டமைப்பும் இந்தியாவில் இருக்கிறது.

இந்திய மின்னணு உற்பத்தி துறை ரூ.6 லட்சம் கோடி சந்தையை எட்டியுள்ளது, 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இதன் மதிப்பு ரூ.25 லட்சம் கோடியாக உயரும். 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் லாபம் ஈட்டிவந்த நிறுவனமாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அதன் நிதி வேறுபக்கம் திருப்பிவிடப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாழ்வாதாரத்தை நீடிக்க முடியாத ஒரு நிறுவனமாக மாறியது. அன்றாட நடவடிக்கைகளுக்கு கூட நிதியளிப்பதற்கு ஆதாரங்கள் இல்லை

பிஎஸ்என்எல் நிறுவனம் முதல்முறையாக கடந்தஆண்டு லாபம் ஈட்டியது. பிரதமர் மோடி ரூ.90ஆயிரம் கோடி நிதியை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு வழங்கி உதவியதால்தான் இது நடந்தது. இதனால்தான் இரு பொதுத்துறை நிறுவனங்கள் நிலைக்க முடிந்தது.

இந்த ஆண்டு ரூ.45 ஆயிரம் கோடியை பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்துக்குள் அளித்திருக்கிறோம். இந்த நிதி 4ஜி ஸ்பெக்ட்ராம் வாங்கவும், நெட்வொர்க்கை மேம்படுத்தவும், பழைய சாதனங்களை நீக்கி நவீன சாதனங்களை வாங்கவும் பயன்படும்.

அடுத்த 2 ஆண்டுகளில் 4ஜி தொழில்நுட்பத்தில் பிஎஸ்என்எல் நிலைத்தன்மை அடைந்து, 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகரும்.
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்

click me!