Union Budget 2023: சுற்றுலாவை ஊக்குவிக்க மாவட்டம் தோறும் ‘யூனிட்டி மால்’கள்!

By SG BalanFirst Published Feb 1, 2023, 2:19 PM IST
Highlights

நாடு முழுவதும் 50 முக்கிய சுற்றுலாத் தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 50 முக்கிய சுற்றுலாத் தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் பாதிப்பை அடைந்துள்ள துறைகளில் ஒன்று சுற்றுலாத்துறை. அந்தப் பின்னடைவிலிருந்து இப்போது மெல்ல மீண்டு வரும் சுற்றுலா சார்ந்த தொழில்களைச் செய்பவர்கள் பட்ஜெட்டில் மகிழ்ச்சிகரமான அறிவிப்புகளை எதிர்நோக்கி இருந்தனர்.

இந்நிலையில், 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பசுமைப் பெருக்கம், இளைஞர்களின் ஆற்றல், ஒருங்கிணைந்த வளச்சி, நிதி ஆற்றல், கடைநிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, நாட்டின் வளங்களை சிறப்பாக பயன்டுத்துதல் ஆகிய ஏழு அம்சங்களின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

Union Budget 2023: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன சலுகை?

இந்த பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய சுற்றுலாத்துறை சார்ந்த திட்டங்கள் பின்வருமாறு:

நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொடர்பான புதிய மொபைல் ஆப் ஒன்றும் உருவாக்கப்படும்.

‘தேகோ அப்னா தேஷ்’ இயக்கம் மூலம் உள்நாட்டுச் சுற்றுலா செல்பவர்களை அதிகப்படுத்தும் வகையில் கிராமங்களில் சுற்றுலா மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் தோறும் மாவட்ட தலைநகரத்திலும் மக்கள் அதிகம் வருகை தரும் சுற்றுலா மையங்களிலும் ‘யூனிட்டி மால்’கள் அமைக்கப்படும். இங்கு ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யப்படும்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் 50 இடங்களில் புதிய விமான நிலையங்கள் மற்றும் ஹெலிடிரோம்கள் அமைக்கப்படும்.

Union Budget 2023-24: பட்ஜெட் அறிவிப்பில் விலை குறையும், உயரும் பொருட்கள் என்னென்ன? முழு விவரம்

click me!