
விப்ரோ மென்பொருள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய புதிதாக பணிக்குச் சேர்ந்த 452 ஊழியர்களை திறமை பகுப்பாய்வு அடிப்படையில் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
இது குறித்து விப்ரோ செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாங்கள் புதிதாக ஏராளமான இளைஞர்களை பணிக்கு அமர்த்தினோம். அவர்களின் திறமையை ஆய்வு செய்தோம்.அதில் 452 ப்ரெஷ்சர்ஸ் செயல்பாடு உரிய பயிற்சிக் காலத்துக்குப் பின்பும் மிகவும் மோசமாக இருந்தது. விப்ரோ நிறுவனத்தைப் பொறுத்தவரை உயர்ந்த தரத்திலான திறமையான ஊழியர்களை வேலைக்கு வைக்க விரும்புகிறோம்.
380 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது ஸ்விக்கி: மன்னிப்புக் கோரிய சிஇஓ
அதனால்தான் விப்ரோ நிறுவனத்தில் பணியில் சேரும் ஊழியர்கள் ஆரம்பநிலையில்கூட திறமையானவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிரோம்.
புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட ஊழியர்களின் திறன், திறமை பகுப்பாய்வு செயல்முறை நடந்தது. இதில், 452 ஊழியர்கள் பயிற்சிக்குப்பின்பும் அவர்களின் வேலைத்திறன் மோசமாக இருந்தது. இந்த விரிவான செயல்திறன் மதிப்பீட்டு செயல்முறை வழிகாட்டுதல் மற்றும் மறுபயிற்சி மற்றும் சில சந்தர்ப்பங்களில் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் நீக்கம் போன்ற செயல்களைத் தூண்டுகிறது. அந்த வகையில் 452 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளோம்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் விப்ரோ நிறுவனம் 600 பேரை புதிதாக வேலைக்கு எடுத்தநிலையில் அதில் 252 பேரை நீக்கியுள்ளது. இருப்பினும் அடுத்த நிதியாண்டிலும், தொடர்ந்து புதிதாக ஊழியர்களை வேலைக்கு எடுப்போம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்சாகத்தில் பங்குச்சந்தை!சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு:Nifty எழுச்சி:HDFC லாபம்
விப்ரோ நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறும் அளவு கடந்த ஆண்டில் 23 சதவீதமாக இருந்தநிலையில், 21.2 சதவீதமாகத் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.