உலகளவில் பொருளாதார சக்தியில் வளர்ந்துவரும் புதிய இந்தியாவை கட்டமைப்பதில் முக்கியமானதொரு பட்ஜெட்டை பிரதமர் மோடி தலைமையிலான அரசு இன்று தாக்கல் செய்துள்ளது என்று மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலகளவில் பொருளாதார சக்தியில் வளர்ந்துவரும் புதிய இந்தியாவை கட்டமைப்பதில் முக்கியமானதொரு பட்ஜெட்டை பிரதமர் மோடி தலைமையிலான அரசு இன்று தாக்கல் செய்துள்ளது
என்று மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கடைசி மற்றும் முழுபட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
undefined
வளர்ந்த இந்தியாவை உருவாக்க வலிமையான அடித்தளம்: பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி புகழாரம்
இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்பாக, மாத வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு பிரிவினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்த பட்ஜெட்டை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தொழில்துறையினர், வர்த்தப்பிரிவினர் புகழ்ந்து வருகிறார்கள். மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகின் முக்கிய பொருளாதார சக்தியாக வளர்ந்து வரும் புதிய இந்தியாவுக்கான முக்கியமான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
மூலதனம், டிஜிட்டல் மயமாக்கல், புதிய நகரங்கள், இளைஞர்களின் திறன்களில் முதலீடு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிக் குறைப்பு தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் மூலம் அனைவரின் ஆதரவையும் வாய்ப்பையும்பெறுவதை பட்ஜெட்-23 உறுதி செய்கிறது.
புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு! எவ்வளவு சேமிக்கலாம்?, பழைய முறை இருக்கா?
உலகில் உள்ள நாடுகள் கொரோனா பரவல் தாக்கத்தில் இருந்தும், ஐரோப்பிய நாடுகள் போரில் இருந்தும் மீள்வதற்குத் தடுமாறி வருகின்றன. எப்படியாகினும், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வளமையான பொருளாதாரத்தைக் கட்டமைத்துள்ளது.
நடுத்தரக் குடும்பத்தினருக்கான வரியைக் குறைத்துள்ளது, விவசாயிகள், சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள் பெரும்பலன்களை அதிகரித்துள்ளது.
மிகப்பெரிய சிக்கலில் இருந்து தேச்தை விடுவித்து மக்களிடம் கொண்டு சென்றமைக்காக பிரதமர் மோடிக்கும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றிகள்
இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்