Union Budget 2023-24 on Science: ChatGPT எதிரொலி! செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு

By SG Balan  |  First Published Feb 1, 2023, 4:29 PM IST

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்திருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.16,631 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்திருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.16,631 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் 14,217.46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 2000 கோடி ரூபாய் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Latest Videos

undefined

மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. இதற்காகவே தகவல் தொழில்நுட்பத்துறைக்கான நிதி ஒதுக்கீடு சென்ற ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது.

Income tax slab Budget 2023:புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு!எவ்வளவு சேமிக்கலாம்? பழைய முறை இருக்கா?

அதன்படி, மேக் இன் இந்தியா திட்டத்தைத் தொடர்ந்து ‘மேக் ஏ.ஐ. இன் இந்தியா’ என்ற திட்டம் அறிமுகமாகிறது. இதன் மூலம் மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்களை நிறுவ உள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.

அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு 7931.05 கோடி ரூபாயும், உயிர் தொழில்நுட்பவியல் துறைக்கு 2683.86 கோடி ரூபாயும், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை 5746.51 கோடி ரூபாயும் என மூன்று பிரிவுகளாக நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கான நிதி ஒதுக்கிடு சற்று குறைக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக 13,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை 12543.91 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சுமார் 1,100 கோடி ரூபாய் குறைவு.

இருப்பினும் 2023ஆம் ஆண்டில் பல்வேறு விண்வெளி திட்டங்களுக்கு இஸ்ரோ ஆயத்தமாகி வருகிறது. நிலவின் மறுபக்கத்தை ஆராயும் சந்திரயான் 3, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா 1, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் உள்ளிட்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது.

Union Budget 2023: ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க 66 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கிடு!

click me!