Union budget 2023: மத்திய பட்ஜெட் 2023ல் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்னென்ன.? ஒரு பார்வை !!

Published : Feb 01, 2023, 04:39 PM IST
Union budget 2023: மத்திய பட்ஜெட் 2023ல் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்னென்ன.? ஒரு பார்வை !!

சுருக்கம்

2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி மைல் வரை செல்லும் திட்டங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறன்களை வெளிப்படுத்துதல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தியை மேம்படுத்துதல், நிதித்துறையை மேம்படுத்துதல் ஆகிய 7 விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

அதிகபட்சமாக ரயில்வே திட்டங்களுக்கு 1.96 லட்சம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. 50 புதிய விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு கடந்த ஆண்டைவிட 66% அதிகமாக, 81,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு 30 சதவீதம் குறைத்துள்ளது. உணவு மானியத்தில் 30 சதவீதம் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டு, கொரோனா கால இலவச உணவு தானியத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விவசாய தொழில்முனைவோருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், தினை உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

வேளாண் கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பட்ஜெட் அறிவிப்பில் விலை குறையும், உயரும் பொருட்கள் என்னென்ன? முழு விவரம்

மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஒரு ஆண்டு தொடரும் என்று தெரிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன்படி, கடந்த ஆண்டு மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன்கள் வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

அந்த கடன்களை 50 ஆண்டுகளில் மாநிலங்கள் மத்திய அரசுக்கு வட்டி இல்லாமல் திருப்பி செலுத்தலாம் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.  இதுமட்டுமின்றி மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கப்படும். 100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். நகர்ப்புற வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?