
வலுவான இந்தியாவை உருவாக்க வலிமையான அடித்தளமாக பட்ஜெட் அமைந்துள்ளது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பட்ஜெட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது கடைசி மற்றும் முழுபட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய அறிவிப்பாக, மாத வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரிச்சலுகை உச்சவரம்பு ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு பிரிவினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:
விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சமூகத்தின் அபிலாஷைகள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்நாட்டின் நடுத்தரக் குடும்பத்தினர்தான் வலிமையான சக்தி. அவர்களுக்கு அதிகாரம் அளிக்க நமது அரசு பல முடிவுகளை எடுத்துள்ளது.
ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!
வளர்ந்த இந்தியாவை உருவாக்க பட்ஜெட் வலிமையான அடித்தளத்தை அமைத்துள்ளது. வேளாண் துறையில் டிஜிட்டல் பரிமாற்றம் எதிரொலிக்கிறது. கிராமப்புற பொருளாதாரத்துக்கு கூட்டுறவு சொசைட்டி மிகவும் முக்கியமானது. உள்கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.10 லட்சம்கோடி முதலீடு என்பது எதிர்பார்க்காதது.
இந்த ஆண்டுபட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளி்த்துள்ளது. பாரம்பரியமாக நாட்டுக்காக உழைக்கும் விஸ்வகர்மா இந்த நாட்டை உருவாக்கியவர்கள். முதல் முறையாக விஸ்வகர்மா பயிற்சி மற்றும் ஆதரவு தொடர்பான திட்டம் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது
புதிய வருமானவரி முறைக்கும் நிரந்தரக் கழிவு! எவ்வளவு சேமிக்கலாம்?, பழைய முறை இருக்கா?
கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அவர்களை மேலும் மேம்படுத்தும். குடும்பங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.