Share Market Today: பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு: ஐடி பங்கு சேதம்

By Pothy RajFirst Published Dec 16, 2022, 9:52 AM IST
Highlights

தேசியப் பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து 2வதுநாளாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

தேசியப் பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து 2வதுநாளாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டியை 50 புள்ளிகள் உயர்த்தியதும், தொடர்ந்து வட்டிவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்ததும் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.இதனால் நேற்று பங்குச்சந்தை 878 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தன.

பள்ளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 62ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவு: ஐடி பங்கிற்கு அடி

இந்நிலையில் அமெரி்க்காவில் பொருளாதார மந்தநிலை உருவாக்கும் என்று பல்வேறு வங்கிகளும் கணிப்புகள் வெளியிட்டுள்ளன. நவம்பர் மாதத்தில் எதிர்பாராத வகையில் சில்லறை விற்பனை மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வட்டிவீதம் உயர்வால், கடன் பெறுவது குறைந்து மக்கள் செலவிடும் அளவும் குறைந்துள்ளது.

இதனால் அமெரி்க்க பங்குச்சந்தையான டோ ஜோன்ஸ், நாஷ்டாக்கும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன. அது மட்டுமல்லாமல் பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டிவீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தின. இதன் எதிரொலி ஆசியச்சந்தையில் இருந்ததால் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், டீசலுக்கு வரி குறைப்பு

இந்தியச் சந்தையிலும் இதன் தாக்கம் இருந்தது. மும்பை, தேசியப் பங்குச்சந்தையும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 210 புள்ளிகள் குறைந்து, 61,588 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில், நிப்ட 70 புள்ளிகள் சரிந்து, 18,344 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களில் 7 நிறுவனப் பங்குகளைவிட மற்ற 23 நிறுவனப் பங்குகள் விலை குறைந்துள்ளன. ரிலையன்ஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, பவர்கிரிட், ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, ஹெச்யுஎல், ஆக்சிஸ் வங்கிப் பங்குகள் லாபத்தில் உள்ளன.

ஐஆர்சிடிசி பங்குகளை விற்கிறது மத்திய அரசு: விலை தெரியுமா? 5 சதவீதம் பங்கு திடீர் வீழ்ச்சி

நிப்டியில் அனைத்து துறைகளும் சரிவில் உள்ளன. குறிப்பாக மருந்துத்துறை, தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் துறை பங்குகள் அதிகமான சரிவில் உள்ளன.


 

click me!